Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

23rd December 2019 09:20:19 Hours

இராணுவத்தினால் துரு மிதுரு நவ ரத்தக் பசுமை மர நடுகைத் திட்டம் ஆரம்பிப்பு

அரசாங்கத்தின் சுற்றுப்புற சூழல் மற்றும் பசுமைத் கருத்திட்டத்துடன் இலங்கை இராணுவம் இணைந்து, நாட்டின் காடு வளர்ப்பு,தேசிய அழகுபடுத்தல், நகர்ப்புற காடுகள் வளர்ப்பு, பசுமையான பாதைகள்,மற்றும் வேளாண் வனவியல் போன்ற விடயங்களை நோக்காக கொண்ட 'துரு மிதுரு நவ ரத்தக்' எனும் தொணிப் பொருளிலான மெகா மர நடுகைத் நிகழ்வானது இன்று (23) அதிகாலை மத்திய சுற்றாடல் சபை சந்தியில் ஆரம்பித்து பத்தரமுல்லையில் உள்ள டென்சில் கோபேகடுவ வீதியின் ஊடாக ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகம் வரை இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதியின் நிலையான சுற்றுப்புறச் சூழல் கொள்கைக்கு அமைய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர அவர்களினால் முன்மொழியப்பட்ட இக்கருத்திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கிடையே மர நடுகையை ஊக்குவித்தல்,நாட்டை பசுமையாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க நகர்ப்புறத்தில் தேசிய வனப்பரப்பு அடர்த்தியை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு 1.5 கி.மீ தூர இடைவெளிக்குள் 170 அரலி மரக்கன்றுகளானது வீதியிலுள்ள இருபுறமும் உள்ள அனைத்து இடங்களிலும் நட்டு,இவ் மெகா திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவ தளபதியின் மேற்பார்வையின் கீழ், இராணுவமானது இந்த திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து இராணுவ தலைமையகங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்பதுடன் பழம், மூலிகை, பொருளாதார மற்றும் அரிய மரக்கன்றுகள், நடுவு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி தங்கள் சொந்த மரங்களை வளர்க்கும் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களைத் தொடங்க எதிர்பார்க்கிறது. அதேபோல் கால்நடை மற்றும் வேளாண்மை பணிப்பகத்தின் கீழ் உள்ள இராணுவமானது கவனிக்கப்படாத மற்றும் கைவிடப்பட்ட சதுப்பு நிலங்களை தாவரங்கள் மற்றும் பிற பயனுள்ள மரக்கன்றுகள், நெல் உற்பத்தி அல்லது காய்கறி வளரும் இடங்களாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை, அந்தந்த உள்ளூர் அரச நிறுவனங்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் கலந்தாலோசித்து ஆராயும்.

துரு மிதுரு நவ ரத்தக் கருத்திட்டத்தின் முன்னோடியான இராணுவத் தளபதியவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுடன் சேர்ந்து இத்திட்டத்தை இன்று (23) காலை முதலாவது அலரி மரக்கன்றினை நட்டு ஆரம்பித்து வைத்தார். இராணுவத் தலைமையகத்தின் வீதியை நிழலாகவும் அழகாகவும் மாற்றுவதற்காக, அனைத்து படைத் தளபதிகளும் குறித்த அலரி மரங்களை குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் நடவு செய்யவதற்கான திட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்குவர்.மேலும், இராணுவத் தளபதியவர்கள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள புதிய மரக்கன்றுகள் முழுமையாக வளரும் வரை தொடர்ந்து பராமரிக்குமாறு அனைத்து படைப் பிரிவுகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் நத்தார் நிகழ்ச்சியை கொண்டாடும் முகமாக 23 ஆம் திகதி மாலை முதல் வீதியின் இருபுறமும் ஒளிரச் செய்யப்படும் அதேவேளை, டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் தேசிய மற்றும் மத முக்கியத்துவ நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, இக் கிறிஸ்மஸ் நத்தார் நிகழ்ச்சி முடியும் வரை வீதியின் இருபுறம் மற்றும் புதிய இராணுவ தலைமையக வளாகம் உள்ளிட்ட இடங்களை ஒளிரச் செய்ய இலங்கை இராணுவமானது திட்டமிட்டுள்ளது.

இராணுவத் தளபதி வழங்கிய புதிய வழிகாட்டுதல்களுக்கமைவாக அனைத்து சமூகங்களிடையேயும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்காக்க் கொண்டு, நாட்டின் அனைத்து முக்கிய மத மற்றும் கலாச்சாரகொண்டாட்டங்களின் போது மத்திய சுற்றாடல் சபை சந்தியிலிருந்து இராணுவ தலைமையகம்வரையிலான வீதியினை தொடர்ந்து ஒளிரச் செய்து அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குறித்த திட்டமானது இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நவில் வீரசிங்க மற்றும் உபகரண மாஸ்டர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்ட்டு ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொண்டர் படையணியின் தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத்தளபதி , அனைத்து படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.