Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2019 18:44:04 Hours

முப்படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்களுக்கான மாநாடு

இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்களுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இரசாயன ஆயுத மாநாடானது கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் இம் மாதம் (05) ஆம் திகதி இடம்பெற்றது.

வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்திகளின் தாக்கம் தொடர்பாகவும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த மகாநாட்டில் தெளிவூட்டும் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மாநாட்டில் ‘வளர்ச்சி, உற்பத்தி, கையிருப்பு மற்றும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், பிராந்திய, அரசு மற்றும் தனியார் துறை தொழிலதிபர்களுடன் பங்களிப்புடன் இந்த மாநாடு அமைந்திருந்தது.

ஆசிய பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) 15 பங்கேற்பாளர்கள், பஹ்ரைன், சீனா, இந்தியா, ஈரான், ஈராக், மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இலங்கையில் 'வேதியியல்' தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, அரசு மற்றும் தனியார் துறையின் தொழிலதிபர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி 30 அதிகாரிகள் இந்த மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்றிகொண்டனர்.

இரசாயன மற்றும் அணுசக்தி உற்பத்திகள் மற்றும் பயன்பாடு தொடர்பான அச்சுறுத்தல்கள் அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களுடன் வேகமாக உருவாகி வருகின்றனதுடன் ஆயுத மோதல்களில் தொடர்ந்து இரசாயன ஆயுதங்களை (சி.டபிள்யூ) பயன்படுத்துவது, குறிப்பாக, தற்போதுள்ள ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களின் பலவீனமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ