Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:56:14 Hours

கிளிநொச்சி மற்றும் மன்னார் கனிஷ்ட கூடைப் பந்தாட்ட வீராங்கனைகள் கொழும்பு வருகை

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள கனிஷ்ட கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் சுதந்திர சதுக்கத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட சம்பியன் போட்டிகளில் பங்கேற்றுவதற்காக கொழும்பிற்கு இம் மாதம் (1) ஆம் திகதி வருகையை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து 13 மாணவர்களும், மன்னார் மாவட்டத்திலுள்ள 10 மாணவர்களும் 8 ஆசிரியர்கள் ,அதிபர் மற்றும் பயிற்றுவிப்பாளர் அவர்களும் தேசிய கூடைப்பந்தாட்ட சம்பியன் போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டனர்.

கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட சம்பியன் போட்டிகளிற்கு சிறப்பு விருந்தினராக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த போட்டிகளிற்கு பங்கேற்றி கொள்வதற்காக வருகை தந்த கனிஷ்ட விளையாட்டு வீராங்கனைகள் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபம், தாமரை தடாகம் மற்றும் நூதனசாலைகளை சென்று பார்வையிட்டனர்.

இறுதியில் இந்த வீராங்கனைகள் இராணுவ மின்சர பொறியியல் இராணுவ முகாமிற்கு சென்று சிற்றூண்டி உணவுகளையும் அருந்திச் சென்றனர். Nike air jordan Sneakers | Footwear