Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2019 10:35:46 Hours

படைக்கலச் சிறப்பணியின் இராணுவ நினைவு தின நிகழ்வு

இலங்கை படைக்கலச் சிறப்பணியின் இராணுவ நினைவு தின நிகழ்வானது கடந்த நவம்பர் மாதம் (29) ஆம் திகதி கெலத்தேவையிலுள்ள படைக்கலச் சிறப்பணி பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவிநிலை பிரதானியும், படைக்கலச் சிறப்பிணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் வருகை தந்தார். இவரை படைக்கலச் சிறப்பணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் தாரக ரத்னசேகர அவர்கள் வரவேற்றார்.

நிகழ்வில் முதல் அங்கமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன. பின்னர் நிகழ்விற்கு வருகை தந்த உயிர் நீத்த இராணுவத்தினரது குடும்பத்தாருடன் பதவிநிலை பிரதானி உரையாடலையும் மேற்கொண்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த 28 அதிகாரிகளும், 415 படை வீரர்களும் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.bridgemedia | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp