Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2019 19:15:40 Hours

இராணுவ தலைமையக ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவத்தில் நீண்ட நாட்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தலைமையகத்தின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 தரத்திலுள்ள(RSM) W.M.S.P விஜயசிங்க அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தருக்கு இவர் நீண்ட நாட்கள் ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து பராட்டுக்களை தெரிவித்தார்.

இராணுவ தலைமையகத்தின் பட்டாலியன் தலைமையகத்தில் பாரிய சேவைகளை ஆற்றி இராணுவத்திற்கு பெருமையை ஈட்டிய அதிகாரி ஆவர். இவர் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்தவர்.

இவர் ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவரது பதவிக்கு இலங்கை பொது சேவைப் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 L.H.P.D சரத்குமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Shoes