Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2019 11:00:13 Hours

துனுக்காய் பிரதேசவாசிகளுக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் இணைப்பு

துனுக்காய் பிரதேசத்தில் உள்ள 652ஆவது படைத் தலைமையகம் மற்றும் இப் பிரதேசவாசிகளின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பியோர் டெக் எனும் நிறுவனமான புதிய ரிவேர்ஸ் ஒஸ்மொஸ் குடிநீர் நிறுவனம் மற்றும் மனுசத தெரண போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் மீள் சுத்திகரிகப்பட்டும் குடிநீர் தாங்கிக்கான திறப்பு விழா நிகழ்வானது செவ்வாயக் கிழமை (26) படையினர் மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் இம் மீள்; சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரமானது சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களை தவிர்க்கும் முகமாக 652 ஆவது படைத் தலைமையகம் மற்றும் பொது மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம் மீள் சுத்திகரிப்பு தாங்கியின் மூலம் ஒரு நாளிற்கு கிட்டத் தட்ட 5000லீற்றர் நீரை வினியோகிப்பதுடன் இத் திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய அவர்களின் தலைமையில் இப் பிரதேச பொது மக்களிற்று இவை தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இத் திட்டத்தின் மூலம் அயலில் உள்ள கிராமவாசிகள் மற்றும் 20ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணி போன்றவற்றிற்கு இவ்வாறான பயனுள்ள திட்டத்தின் மூலம் நீர் வழங்கப்படுகின்றது.

இந் நிகழ்வில் 65ஆவது படைத் தலைமையக தளபதி கட்டளை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் படையினர் மனுசத் தெரண அத்துடன் பியோர் டெக் போன்ற நிறுவனத்தின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.buy footwear | Jordan Ανδρικά • Summer SALE έως -50%