Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2019 15:22:27 Hours

புதிய ஆளனி நிருவா பணிப்பாளர் பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சிசிர பிலபிடிய அவர்கள் இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் புதிய பணிப்பாளராக இம் மாதம் (25) ஆம் திகதி ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள பணிமனையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இந்த பணியகத்தின் முன்பிருந்த பணிப்பாளரான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல சனாதிபதி செயலகத்திற்கு கடமை மாற்றத்தின் நிமித்தம் சென்றதையிட்டு இந்த புதிய அதிகாரி இந்த பதவிக்கு இன்றைய தினம் பதவியேற்றார்.

கோட்டை ஶ்ரீ தலதா மஹா விகாரையின் அளுத்நுவர அனுருத்த நாயக தேரர் அவர்களது சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு இந்த பதவியேற்பு இடம்பெற்றது.

பிரிகேடியர் பிலபிடிய மாதுருஓயா இராணுவ பயிற்சி முகாமில் இதற்கு முன்பாக கடமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Women's Nike Air Max 270 trainers - Latest Releases