Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2019 08:42:19 Hours

மானல்வத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்குமாடி கட்டிடம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

மானல்வத்தையில் பெளத்த படிப்பிற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகானந்த சர்வதே கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வானது நாகானந்த சர்வதேச நிறுவனத்தின் துணை வேந்தர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான போதகம சண்திம நாயக தேரர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (23) ஆம் திகதி சனிக்கிழமை இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்த கட்டிட நிர்மான பணிகள் 7 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியினரால் நிர்மானிக்கப்பட்டு, இராணுவ தளபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டிடத்துக்கு சண்திம நாயக தேரர் அவர்களின் தலைமையில் மகா சங்க உறுப்பினர்களால் 'செத் பிரித்' மதவழிபாடுகள் இடம் பெற்றன.அத்துடன் இந்த நிகழ்வின் ஊடாக பல ஊடக கண்காட்சி விளக்கமளிப்புக்கள் பிரதம அதிதி மற்றும் அதிகளுக்கு முன்வைக்கப்பட்டன.

இக் கட்டிடம் இராணுவத் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் 7 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஷாஹிக்கலா பெரேரா அவர்களது தலைமையில் அவரது படையணியின் பங்களிப்புடன் கல்வியாண்டின் ஆரம்பத்தின் நிமித்தம் இந்த கட்டிட பணிகள் முழுமையாக்கி நிறைவு செய்யப்பட்டன.

இப் நிர்மாண பணிகளுக்கு நாகானந்த சர்வதே நிறுவனத்தின் மூலமாக கிடைத்த மூலப்பொருட்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி 7 ஆவது இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் 113 படையினரால் இரவும் பகலும் தனது பாரிய சேவையின் நிமித்தம் இக் கட்டிடம் நிர்மாணிக்க முடிந்தது. அத்துடன் இந்த திட்டத்தின் தொடக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு, முழு கட்டுமானப் பகுதியையும் தொடங்குவதில் இருந்து இலங்கை இராணுவம் முக்கிய பங்கை வகித்திருந்தது..

களனியை தளமாகக் கொண்ட நாகானந்தா பெளத்த படிப்பிற்கான சர்வதேச நிறுவனம் கல்வி கற்பிப்பதற்காக, உலகளாவிய ரீதியில் மனித ஆரோக்கியத்தில் ஈடுபட மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் தயாரித்தல், தொடர்ச்சியான வாழ்நாள் கற்றல், விமர்சன சிந்தனை, கலாச்சார மற்றும் சமூக நல்வாழ்வு தனிப்பட்ட சாதனைகள் மற்றும் பின்னணியில் குழுப்பணி, திறமையான பௌத்த நெறிமுறைகள் ஆகியவை அடங்கும்.

இக் கட்டிடம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் இது ஆகும்.

நாகானந்தா பெளத்த படிப்பிற்கான கட்டப்பட்ட இந்த சர்வதேச நிறுவனம், கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் அமைந்துள்ள பண்டைய நாலந்த பல்கலைக்கழகத்தின் வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் சர்வதேச பல்கலைக்கழகமாக விளங்கும் நாலந்தா இது ஒரு புகழ்பெற்ற மகாவிஹாரை அல்லது பௌத்த இராஜ்ஜியமாகவும், 5 ஆம் நூற்றாண்டு முதல் 1200 ஆம் ஆண்டு வரை கற்றல் இடமாகவும் விளங்கியது.. அதன் உச்சத்தில், நாலந்தா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, சீனா, கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பௌத்த கல்வியை தொடர்வதாற்காக பல மாணவர்கள் வருகை தந்துள்ளனர் 2,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் இந்த பல்கலைக்கழகம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Jordan Release Dates , Iicf