Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2019 17:54:05 Hours

அதிமேதகு ஜனாதிபதியினால் புதிய அமைச்சர்கள் நியமனம்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது மூத்த சகோதரரான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாட்டின் 14ஆவது புதிய பிரதமராக கடந்த 21ஆம் திகதி நியமித்த பின்னர், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புதிய இடைக்கால அரசை அமைக்குமுகமாக 22ஆம் திகதி காலை புதிய அமைச்சர்களுக்கான நியமனக் கடிதத்தினை வழங்கிவைத்தார்.

மேலும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் எளிமையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு தலைமை அதிகாரி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுடன் குறித்த மேடைக்கு வருகை தந்தவுடன் இடம்பெற்ற தேசியக் கீத பாடலினைத் தொடர்ந்து இந்நிகழ்வானது ஆரம்பித்தது. மேலும் அமைச்சர்களுக்கான நியமனக் கடிதத்தினை வழங்கிவைத்த பின்னர் ஜனாதிபதியவர்கள் புதிய இடைக்கால அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களைப்பற்றி எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இரண்டு உயர் பதவிகளுக்கு ஒரே குடும்பத்தில் இருந்து ஜனநாயகமான முறையில் தெறிவு செய்யப்பட்ட முதலாவது சகோதரர்களாவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Asics footwear | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today