Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2019 18:51:06 Hours

கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்பு

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் சுபீட்சம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தம் நோக்காக கொண்டு நவம்பர் மாதம் (21) ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சமகாலத்தில் மிகவும் அரிதான மற்றும் தனித்துவமான நிகழ்வுகளில் ஒன்றான இந்த நிகழ்வு, தெற்கில் உள்ள கிரிவபட்டுவவில் ஒரே குடும்பத்தின் அரசியல் தெரிவின் மூலம் ஒற்றுமையின் உண்மைத்தன்மை, தேசிய அர்ப்பணிப்பு, பொது உணர்வுகளை அங்கீகரித்தல் மற்றும் தேசத்தின் நம்பிக்கையின் அதிகப்படியான ஆணையானது மக்களினால் வழங்கப்பட்டதற்கு சான்றாக காணப்பட்டது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில்விக்ரம சிங்க ,திருமதி சிரந்தி ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள் ,பாதுகாப்பு தலைமை அதிகாரி, முப்படைத் தளபதிகள் உட்பட பலர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நலம் விரும்பிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர்கள் மத்தியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி காரியலயத்திற்கு பாதுகாப்புத் தலைமை அதிகாரி மற்றும் முப்படைத் தளபதிகளுடன் வருகை தந்து பிரதமர் தனது வாழ்த்துகளை அனைவரக்கும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேசியக் கீதம் பாடப்பட்டதுடன், மங்களகரமான தருணத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி ஜயசுந்தர அவர்கள், கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் 3 ஆவது தடவையாக பிரதமர் பதவியை பொறுப்பேற்கும் முகமாக சத்தியபிரமாண உறிதியளித்தார். மேலும் நாட்டின் அரசியல் சட்டத்திட்டத்திற்கமைய சத்திய பிரமாண உறுதி மொழியானது வாசிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்ட பின்னர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கையொப்பமிடப்பட்ட பத்திரத்தினை புதிய பிரதமர் அவர்களிடம் கையளித்ததோடு, வாழ்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் அனைத்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம் பெற்ற புதிய பிரதமரின் கடமை பொறுப்பேற்கும் இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது முடிவுற்றது. Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals