Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2019 11:20:38 Hours

இராணுவ தளபதி புதிய ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் 2019 நவம்பர் மாதம் (18) ஆம் திகதி பதவியை பொறுப்பேற்றுகொண்ட பின்னர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜனாதிபதி அவர்களை முதல் முறையாக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன் போது இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி அவர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், முப் படைகளின் தளபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இராணுவமானது தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதி படுத்தினார்.

புதிய ஜனாதிபதியின் கடமை பொறுப்பேற்றுதலை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் புதிய ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு சின்னத்தை வழங்கினார். Nike Sneakers | Releases Nike Shoes