Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2019 10:10:00 Hours

ஜனாதிபதியவர்களின் அனுமதியுடன் எட்டு பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு

முப்படைத் தளபதியும் ஜனாதியுமான மேன்மை தங்கிய அதிமேதகு ஜனாதிபதியவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (08) புதிதாக நிறுவப்பட்ட இராணுவத் தலைமயகத்தை திறந்து வைத்ததுடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இராணுவத்தின் பிரிகேடியர் பதவியில் உள்ளவர்களை தற்காலிக மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றனர். இந் நிகழ்வானது புதிய இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நிகழ்வில் எட்டு பிரிகேயடிர் அவர்களுக்கான மேஜர் ஜெனரல் பதவிநிலையானது 08ஆம் திகதி நவம்பர் மாதம் 2019ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இப் புதிய இராணுவத் தலைமையகத்தின் திறப்பு விழா நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் பதவிநிலைக்கு உயர்த்தப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

பிரிகேடியர் ஜெ சி கமகே இலங்கை பொறியியலாளர்; படையணி 24ஆவது படைத் தலைமையக தளபதி.

பிரிகேடியர் கே என் எஸ் கொடுவேகெதர இலங்கை பீரங்கிப் படையணி 55ஆவது படைத் தலைமையக தளபதி.

பிரிகேடியர் கே ஜெ ஜயவீர இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் சேவை முன்னேற்ற நிலையம் புத்தள

பிரிகேடியர் கே எச் பி பி பெணான்டோ இலங்கை சிங்கப் படையணி 59ஆவது படைத் தலைமையக தளபதி.

பிரிகேடியர் எம் டீ விஜேசுந்தர இலங்கை இலேசாயுத காலாட் படையணி 66ஆவது படைத் தலைமையக தளபதி.

பிரிகேடியர் ஏ எஸ் ஹேவவிதாரன இலங்கை பீரங்கிப்; படையணி இராணுவ புலனாய்வு பணிப்பக பணிப்பாளர்

பிரிகேடியர் பீ ஏ எல் ரத்நாயக்க இலங்கை சிங்கப் படையணி 51ஆவது படைத் தலைமையக தளபதி.

பிரிகேடியர் எஸ் எஸ் வடுகே கெமுனு ஹேவா படையணி 52ஆவது படைத் தலைமையக தளபதி. buy footwear | Nike