Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2019 11:30:50 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் வினாவிடைப் போட்டியில் தேர்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள 51ஆவது படைத் தலைமையகத்தால் பொது அறிவு மற்றும் இராணுவம் தொடர்பான அறிவு போன்றவை தொடர்பான வினாவிடைப் போட்டியனாது யாழ் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகளை உள்ளடக்கி இப் படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (04) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் யாழ் படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள 30 படைப் பிரிவுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய 5குழுக்களில் 16 குழுப் பிரிவினர் 2ஆம் சுற்றிற்கு தெரிவாகினர். எட்டு குழுவினர்கள் மேலும் இரண்டாம் சுற்றிற்கு தெரிவாகியதுடன் இறுதிச் சுற்றிற்கு 2குழுவினர் இறுதிச் சுற்றிற்கு தெரிவாகினர். மேலும் 10ஆவது பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த அதிகாரியான மேஜர் திவங்க கண்ணங்கர அவர்கள் சிறந்த போட்டியாளராக தெரிவாகியதுடன் 01ஆவது விஜயபாகு காலாட் படையணி குழுவானது இரண்டாமிடத்தை பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் போன்றவற்றை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வின் இறுதியில் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவிப்பாளர்கள் சிறந்த வரைபட வாசிப்பாளர்கள் போன்றோரிற்கான சான்றிதழ்களும் இராணுவத் தளபதியவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் 55ஆவது படைத் தளபதியவர்கள் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு தளபதியவர்கள்51 மற்றும் 52ஆவது படைத் தலைமையக தளபதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் நிர்வாக பணிப்பாளர்கள் யாழ் படைத் தலைமயக உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Sports Shoes | Air Jordan Sneakers