Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2019 14:01:47 Hours

முல்லைத்தீவு மாணவர்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்குகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இம் மாதம் இரண்டு நாட்கள் 17 – 18 ஆம் திகதிகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன.

முதல் நாள் (17) ஆம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கில் கல்வி பொது தராதர சாதாரனதர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 474 மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாள் 18 ஆம் திகதி பிரதி கல்வி பணிப்பாளர் திரு கே செல்வராஜா, இரனைபலை ரோமன் கத்தோலிக பாடசாலையின் ஆசிரியர் திரு கே கஜேந்திரன், இரனைபலை ரோமன் கத்தோலிக பாடசாலையின் ஆசிரியர் திரு ஆர் ஸ்வனன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் ஆசிரியர் திரு கே கஜந்தன் போன்ற சிறப்பு தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களினால் ஆங்கிலம், வரலாறு, விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்கள் தொடர்பான கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கருத்தரங்கில் பங்கேற்றிய மாணவர்களுக்கு இராணுவத்தினரால் காலையுணவு, மதியவுணவு, மாலை வேலை தேநீர்கள் வழங்கி வைத்தனர்.

இந்த கருத்தரங்கு நிகழ்வில் புதுக்குடியிருப்பு கல்வி வலைய பணிப்பாளர் திரு சுப்ரமணியம் ஈஸ்வரன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் அதிபர் திரு கே வி டீ சிவராசா, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் திரு கே மகேந்திர்ராசா, முல்லைத்தீவு வலய காரியாலயத்தின் அதிகாரி திரு ரகு உதயகுமார ஆசிரியர்கள் இணைந்திருந்தனர். அத்துடன் இராணுவ தரப்பிலிருந்து 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருன ஆரியசிங்க, 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் கஸ்தூரிமுதலி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | NIKE HOMME