Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2019 21:17:22 Hours

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு இந்து மத ஆசிர்வாத நிகழ்வு

ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு 13 இல் அமைந்துள்ள ஶ்ரீ பொன்னம்பலவானேஸ்வரம் ஆலயத்தில் இந்து மத ஆசிர்வாத பூஜைகள் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த சமய நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ இந்து மத சமய சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் எச். எல் குருகே அவர்கள் வரவேற்று கோயிலில் இடம்பெற்ற பூஜைக்கு அழைத்து சென்றார்.

இந்த ஆசிர்வாத பூஜையில் இராணுவ கொடிகளுக்கு ஆசிர்வாதங்கள் வழங்கி சிறப்பு அபிசேகமும் இடம்பெற்றன. இந்த பூஜைகளை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் தலைமை குருக்களான மதிப்புக்குரிய ஶ்ரீ சுரேஷ்வரா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிர்வாத பூஜைகளில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன ,இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவத்திலுள்ள இந்து மத த்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger