Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2019 17:05:22 Hours

ஜனாதிபதியினால் முன்னாள் கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கு கௌரவ பட்டங்கள்

மேன்மை தங்கிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (19) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” பட்டமும் ,முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” எனும் கௌரவ பட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு முப்படையினரது இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” எனும் கௌரவ பட்டமும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” எனும் கௌரவ பட்டமும் வழங்கப்பட்டு கடற்படையின் அத்மிரால் மற்றும் விமானப்படையின் மார்ஷலின் இரண்டுகொடிகளும் அதிகாரபூர்வமாக பரக்கவிடப்பட்டன.

கடற்படையின் அட்மிரல் மற்றும் இலங்கை விமானப்படையின் மார்ஷல் அவர்களுக்கு ஓய்வு பெறும் வரை அமைச்சரவை அந்தஸ்துக்கு இணையாக உள்ளன. ஒரு நாட்டின் முத்தரப்பு சேவைகளில் வழங்கப்படும் மிக உயர்ந்த பதவியுயர்வு இது ஆகும். ஐந்து நட்சத்திரங்களால் தனித்துவமாகக் குறிக்கப்படுகிறது மற்றும் இது ஒரு கெளரவ இராணுவ தரவரிசையாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டகொட, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் முப்படை உயரதிகாரிகள் மற்றும் அவரது பாரியார்கள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ