Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2019 10:05:06 Hours

512 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 512 ஆவது படைத் தலைமையகத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவு விழா இம் மாதம் (1) ஆம் திகதி தலைமையகத்தில் இடம்பெற்றது.

கட்டளை தளபதிக்கு 17 ஆவது கெமுனு காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலிலும் தளபதி இணைந்து கொண்டார்.

அன்றைய தினம் மாலை தலைமையகத்தில் இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமய ஆசிர்வாத நிகழ்வுகள் யாழ் நாக விகாரையிலும், யாழ் அடைக்கல மாதா தேவாலயத்திலும் இடம்பெற்றது. அத்துடன் கொடையாளியான திரு கே எஸ் கந்தராஜா அவர்களது அனுசரனையில் வழங்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள் நல்லூர் கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த 4000 பக்தர்களுக்கு படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.Running sport media | adidas