Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2019 11:00:06 Hours

விஷேட அதிரடிப்படையின் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வில் கிழக்கு படைத் தளபதி பங்கேற்பு

எமது நாட்டில் ஏற்பட்டிருந்த 30 வருட கால எல்டிடிஈ கொடிய பயங்கரவாத யுத்தத்திலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டிற்காக உயிர்களை தியாகம் செய்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்களது 35 ஆவது ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வு அம்பாறையிலுள்ள விஷேட அதிரடிப்படை முகாம் நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர அவர்கள் வருகை தந்தார். இவரை இந்த முகாமின் கட்டளை தளபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் முதலில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நினைவு தூபிகளுக்கு மலரஞ்சலிகள் செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் கிழக்கு பாதுகாப்பு தளபதியினால் அங்குள்ள படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர் விஷேட அதிரடிப்படையினரது சுபசாதனை நிமித்தம் அவர்களது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் கிழக்கு தளபதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியில் கிழக்கு தளபதி அவர்களினால் முகாம் வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன. Sports brands | UOMO, SCARPE