Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2019 06:53:33 Hours

முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

பரந்தன் இரண்டாம் கட்டையில் அமைந்துள்ள நவஜீவன்னம் தேவாலய வளாகத்தினுள் 2 மில்லியன் ரூபாய் செலவில் முன்பள்ளி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைத்தல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் தலைமையில் இம் மாதம் (9) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த கட்டிட நிர்மான பணிகள் இராணுவத்தினரது பூரன ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, கிழக்கு மாகாண மெதடிஷ் திருச்சபையின் தலைவர் அருட்தந்தை S.S டெரஷ், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா, 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B.P.S டி சில்வா, 573 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | jordan Release Dates