Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2019 15:44:33 Hours

‘கனர் சுபர்குரோஷ் – 2019 ஊடக சந்திப்பு

இலங்கை பீரங்கிப் படையணியினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் ‘‘கனர் சுபர்குரோஷ் – 2019 ஊடக சந்திப்பானது இம் மாதம் (6) ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பீரங்கிப் படையணியின் படைத் தளபதியும் இராணுவ செயலாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

‘கனர் சுபர்குரோஷ் போட்டியானது மின்னேரியவிலுள்ள பீரங்கிப்படை ஓட்டத்திடல்களில் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த போட்டிகளின் மூலம் கிடைக்கப் பெறும் நிதிகள் பீரங்கிப் படையணியின் நலன்புரித் திட்டங்களுக்காகவும், விஷேட தேவையுடைய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது சுபசாதனை திட்டங்களுக்காக பயண்படுத்தப்படும்.

‘ஶ்ரீ லங்கா ஒடொ – ஸ்போட் டிரயிவர்ஷ் சங்கத்தின் தலைவர் திரு ரிஷ்வி பாரூக், ஶ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பணிப்பாளர் திரு குமார சமரசிங்க, எக்‌சஷ் இன்ஜீனியரிங் பிஎல்சி நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு மனோஜ் ஜயசூரிய, CEAT களனி இன்டர்நெஷனல் டயர்ஷ் தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு பிஷ்ரி லத்தீப், தரம் முகாமையாளர் திரு சமித் குலசிங்க அவர்கள் இந்த ஊடக சந்திப்பின் போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தனர்.

இந்த நிறுவனத்தினர் போட்டிகளுக்கான அனைத்து அனுசரனைகளையும் வழங்கி வைத்துள்ளனர். அத்துடன் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதி அவர்களும் ஊடகங்களுக்கு ‘கனர் சுபர்குரோஷ் போட்டி தொடர்பான விடயங்களையும் இச்சந்திப்பின் போது விளக்கமளிக்கும் போது கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறை இடம்பெறும் போட்டிகளிலும் சிறுவர்களுக்கான மோட்டார் சைக்கிள் சவாரி போட்டிகளும் இடம்பெறுவதோடு இந்த போட்டியில் பங்கேற்றி வெற்றிபெருபவர்களுக்கு பெருமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்படுமென்று வலியுறுத்தினார். அத்துடன் இந்த ஊடக சந்திப்பிற்கு பங்களித்த அனைத்து ஊடகவியலார்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். Asics footwear | UOMO, SCARPE