26th August 2019 20:32:08 Hours
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 – 30ஆம் திகதிகளில் 9ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் பாதுகாப்பு கருத்தரங்கிற்காக உலக புகழ்; பெற்ற பாதுகாப்பு பங்குதாரிகள், பாதுகாப்பு நிபுணர்கள், உலக மூலோபாய வல்லுனர்கள;, புத்திமான்கள் மற்றும் இராணுவ நிபுணர்களின் பங்களிப்புடன் “ பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயார் நிலையில் உள்ளதுடன் இதற்கான ஊடக சந்திப்பானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் 26ஆம் திகதி மாலை இடம் பெற்;றது.
இவ் ஊடக சந்திப்பில் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கூட்டுப்; படை நடடிவக்கைப் பயிற்சி போன்றன இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் விபரிக்கப்பட்டதோடு இச் சந்திப்பில் இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே இராணுவ பொது நிறுவாக பிரதானியான மேஜர் ஜெனரல் ஏ எம் ஆர் தர்மசிறி பயிற்சிப் பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுராச் பங்சகயா இராணுவ ஊடக பணிப்பாரளான பிரிகேடியர் சுமித் அதபத்து கொமாண்டோ படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் கே ஏ சமரசிறி விசேட படைப் பிரிவு தலைமையத்தின் தளபதியான கேர்ணல் ஜெ பி சி பீரிஸ் குழுத் தலைவரான தினேஷ் ஜயவீர மற்றும் கடற் படை உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இரண்டு நாள் கருத்தரங்கில் 13 வெளிநாட்டு மற்றும் 14 உள்ளூர் பேச்சாளர்கள் உட்பட 800 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கருத்தரங்கானது அறிவுசார்ந்த தொடர்புகளின் போக்கு மற்றும் துணை கருப்பொருள்களை உள்ளடக்கியும் ‘தற்கால பாதுகாப்பு, மோதல் அல்லது ஒத்துழைப்பு, ‘பயங்கரவாதத்தை எதிர்கொள்தல், ‘இராணுவ நவீனமயமாக்கல்’ மற்றும் ‘தற்கால பாதுகாப்பு நிலைமையின் இராணுவ தயார்நிலை’ போன்ற விடயங்களை உள்ளடக்கி கருத்துக்கள் இந்த கருத்தரங்குகளில் முன்வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.
மூத்த பேராசிரியரும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் ஜயவர்தன, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் வெளியுறவு விவகார அமைச்சின் செயலாளருமான திரு. எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகள் கல்வி மையத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹரிந்த விதானகே, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவரும் / நிரந்தர பிரதிநிதியுமான டொக்டர் சரலாலா பெர்னாண்டோ, பங்களாதேஷ அரசாங்கத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், நியூஜோர்க்கிலுள்ள ஐக்கிய நாட்டின் முன்னாள் தூதுவர் மற்றும் நிரந்தர பிரதிநிதி, ஐக்கிய நாட்டின் முன்னாள் தூதுவர் மற்றும் உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவா, பொதுச்செயலாளர் யுஎன்சிடிஏடியின் சிறப்பு ஆலோசகரும், கட்டார் முன்னாள் தூதுவருமான டொக்டர் இப்தேகர் அகமது சவுத்ரி , பாத்பைண்டர் அறக்கட்டளையின் இந்தோ-லங்கா முயற்சிகள் மையத்தின் பணிப்பாளரும் இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகம் மற்றும் லெஷன் நோமல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு) ஆர்எஸ்பி, வி.எஸ்.வி, யூஎஎஸ்பி, ஆர்.சி.டி.எஸ், பி.எஸ்.சி, பி.எச்.டி, எம்.எஸ்.சி, எம்.ஏ பங்களாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உலகளாவிய இராணுவ ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு நிதின் ஏ கோகலே , ஊடக தொழில்முனைவோர், மூலோபாய விவகார ஆய்வாளர் மற்றும் புத்தகங்களின் ஆசிரியர் இராணுவ வரலாறு, கிளர்ச்சிகள் மற்றும் போர்கள் தொடர்பான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.என்.எம் முனிருஸ்ஸமான், அணு மற்றும் விண்வெளி கொள்கை முன்முயற்சி, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான திரு. ஆசாத் உல்லா கான் , இஸ்லாமாபாத்தின் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டொக்டர் ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன், ஆர் அன்ட் டி டொமைனை மையமாகக் கொண்ட ருமேனிய தனியார் நிறுவனமான கியூ ஏஜென்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் திரு டேனியல் கேப்ரியல் தினு , ரஷ்ய ஆயுதப் படைகளின் மின்னணு போர் தலைமைப் பிரிவின் குழுத் தலைவர் கேர்னல் பாவெல் வி. செர்னிஷோவ், கூட்டு இராணுவ ஆய்வுகள் திட்டத்தில் மூலோபாய ஆய்வுகள் பேராசிரியர் டொக்டர் அகமது சலா ஹாஷிம், சர்வதேச பட்டப்படிப்பு கல்லூரியின் எஸ். ராஜரத்தினம், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் தேசிய பல்கலைக்கழக சிங்கப்பூரின் டொக்டர் சுலனி அத்தநாயக்க, உலகளாவிய இடர் மற்றும் பின்னடைவு, ஜெனீவா பாதுகாப்பு கொள்கைக்கான மையத்தின் தலைவர் டொக்டர் ஜீன்-மார்க் ரிக்லி, ஜெனீவா மையத்தில் ஜனநாயக கட்டுப்பாட்டு ஆயுதப்படைகளின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவர் டொக்டர் ஆல்பிரெக்ட் ஷ்னாபெல், சுயாதீன ஆராய்ச்சியாளர் டொக்டர் ஆண்ட்ரியா ஸ்டோயன் கரடெலி , ஏ. பிரவுன், பி.எச்.டி. - மூத்த விரிவுரையாளர், உள்நாட்டு பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் பாதுகாப்புத் துறை கடற்படை முதுகலைப் பள்ளி மான்டேரி, கலிபோர்னியாவின் டொக்டர் ஷானன், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர , பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தெமடம்பிடிய, வடமேற்கு கடலோர கட்டளை தளபதி ரியர் அத்மிரால் ருவன் பெரேரா, விமானப்படை பயிற்சி பணிமனையின் பணிப்பாளர் எயார் வைஷ் மார்ஷல் பிரசன்ன பயோ, திட்டம் மற்றும் கொள்கை ஆய்வாளர் - பெண்கள் உரிமைகள் மற்றும் பாலின ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி, இலங்கை செல்வி ஷரிகா குரே , சுயாதீன வழக்கறிஞர் (சட்டத்தின் வழக்கறிஞர், வருகை விரிவுரையாளர், களனி பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய உறுப்பினர் பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் திரு. இந்திகா பெரேரா , பண்டாரநாயக்க வருகை ஆராய்ச்சி சக சர்வதேச ஆய்வுகள் மையம் மற்றும் மூலோபாய ஆய்வுத் துறை விரிவுரையாளர் திரு நிலந்தன் நிருந்தன், பேச்சாளர் திரு சனத் சந்தன டி சில்வா ஆகியோர் பங்கேற்பார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் கே மேத்தா மற்றும் பேராசிரியர் ஹில்டி ரேப் எம்ஏ ஒக்சன் எப்ஆர்எஸ்ஏ எம்பிபி ஆகியோரின் பங்களிப்புடன், 22 நாடுகளைச்சேர்ந்த 24 பாதுகாப்பு இணைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பிரகாரம் 40 நாடுகளில் இருந்து 82 வெளிநாட்டு பிரதிநிதிகள் இப் பாதுகாப்பு கருத்தரங்கில்-2019 கலந்துகொள்ள உறுதியளித்துள்ளனர். மேலும் 19 திகிதி வரை அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், சீனா, கனடா ,மாலைதீவு( பாதுகாப்பு படை பிரதாணி) மியன்மார் ,நேபால், நைஜிரியா, ஓமான், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், கட்டார், தான்சானியா, ஐக்கிய இராச்சியம் ,வியட்நாம் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளைச் சேரந்த உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளனர்.
பேராசிரியர் அமல் ஜெயவர்தனவின் தலைமையில் முதல் அமர்வில் (டொக்டர் ஷானன் ஏ. பிரவின் - அமெரிக்கா), 'ஆசியா பசிபிக் பாதுகாப்பு நிலப்பரப்பு' (டொக்டர் ஆண்ட்ரியா ஸ்டோயன் கரடெலி - துருக்கி) மற்றும் 'தெற்காசியா பாதுகாப்பு நிலப்பரப்பு' (திரு நிதின் ஏ. கோகலே - இந்தியா) போன்றோரினால் 'உலகளாவிய பாதுகாப்பு நிலப்பரப்பின் அம்சங்கள்' தொடர்பாக கருத்துகள் இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்படவுள்ளன.
இரண்டாவது இடம்பெற்ற அமர்வுகளின்போது திரு H.M.G.S பலிகக்கார அவர்களின் தலைமையில் ‘இலங்கை: 2009 க்குப் பிறகு தசாப்தம்’- எனும் தலைப்பில் (இலங்கையின் டொக்டர் சூலனி அத்தநாயக) அவர்களினாலும் ‘இலங்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்’ (பாகிஸ்தானின் திரு அஷாட் உலாஹ் கான்) அவர்களினாலும், திரு. எச்.எம்.ஜி.எஸ். உலகளாவிய பயங்கரவாதத்தின் முகங்கள் '- (பேராசிரியர் அகமது சலா ஹாஷிம் - சிங்கப்பூர்). போன்றோரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
முதல் நாள் கருத்தரங்கில் கீழ்வரும் தலைப்பின் கீழ் கலாநிதி ஹரின்த விதானகே அவர்களின் தலைமையில் தன்னிக்க ஆயுத முறையின் தாக்கம் - ( கலாநிதி ஜுன் மார்க் ரிக்லி – சுவிஸ்லாந் ) அவர்களினாலும் மின்காந்த நிறமாலையின் இராணுவ இயக்கவியல் (கேணல் பவல் வி செர்நிசோ- ரஷ்யா) அவர்களினாலும் விண்வெளி இராணுவமயமாக்கலில் இருந்து எழும் சிக்கல்கள் ( கலாநிதி ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன்) போன்றோரினால் உரைகள் இடம்பெறவுள்ளன.
இரண்டாவது நாளான ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெறும் கருத்தரங்கில் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே அவர்களினால் 'பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை' எனும் தலைப்பில் உரையும், பங்களாதேசத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.என்.எம் முனிருஸ்ஸமான் - அவர்களினால் 'இராணுவ தயார்நிலை மற்றும் நிலையான வளர்ச்சி' எனும் தலைப்பில் கருத்துக்களும், திரு டேனியல் கேப்ரியல் தினு ருமேனியா அவர்களினால் 'அகதிகள் மேற்கொள்ளும் நெருக்கடியை நிர்வகித்தல்' தொடர்பான உரைகளும், பங்களாதேசத்தைச் சேர்ந்த டொக்டர் இப்தேகர் அகமது சவுத்ரி மற்றும் சுவிஸ்லாந்து டொக்டர் ஆல்பிரெக்ட் 'தற்கால பாதுகாப்பு நிலப்பரப்பில் இராணுவ தயார்நிலை சவால்கள்' தொடர்பான விளக்கங்களும் இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்படவுள்ளன.
இப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக வெவ்வேறு நான்கு; பிரிவின் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்புகளும் அத்துடன் நம்பகத் தன்மையான பாதுகாப்பு முறைகள் தொடர்பான பல விடயங்கள் உள்ளடங்களாக பலவிடயங்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளன.
அந்த வகையில் இந்த பிரிவுகள் (A, B, C, D) போன்ற பிரிவுகளில் காணப்பட்டதோடு சிவில் இராணுவ ஒருங்கிணைப்பின் பாதுகாப்பு தொடர்பாக A பிரிவு தற்கால பாதுகாப்பில் ஒருங்கிணைந்த திட்டம் எனும் விடயம் தொடர்பாக B பிரிவு மேலும் பாதுகாப்பு தொடர்பில் தொழில்நுட்பத்தின் பங்கீடு தொடர்பாகவும் குழு C பிரிவு அத்துடன் தற்காலத்தில் இராணுவத்தின் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் தொடர்பாகவும் D பிரிவு போன்ற வகைகளில் முன்னாள் தூதுவர் மற்றும் கலாநிதி செல்வி சாரளா பெர்ணான்டோ அவர்களால் இந்த கருத்தரங்கில் விளக்கங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி அமைப்பின் பிரதிநிதி செல்வி சாரிகா குரே, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய, சுயாதீன வழக்கறிஞ்சர் திரு இந்திக்க பெரேரா, இலங்கை விமானப் படை பயிற்சிப் பணிமனையின் பணிப்பாளரான எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாஓ , பண்டாரநாயக கல்வி மையத்தின் பிரதிநிதி திரு நிலந்தன் நிருந்தன், வட மேற்கு கடலோர கடற்படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான ரியர் அத்மிரால் ருவன் பெரேரா, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் திரு சனத் சந்தன டி சில்வா கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , வெளிவிவகார அமைச்சின் செயலாளரான திரு ரவிநாத ஆரியசிங்க போன்றோரால் இந்த கருத்தரங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் உலக மயமாக்கலின் பாதுகாப்பு தொடர்பாக 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச ரீதியாக காணப்படும் பாதுகாப்பு , அவற்றிற்கான சவால்கள் அத்துடன் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றிற்கு சவாலாக அமையும் தொழில்நுட்ப சவால்கள் காலநிலை மாற்றங்கள், சூழல் மாற்றங்கள், பயங்கரவாத பாதுகாப்பு வலய ஒருங்கிணைப்பு போன்றவை தொடர்பாகவும் விபரிக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது இராணுவ பயிற்சி பணியகம் மற்றும் பல இராணுவ பணியகங்களின் முழுமையான ஒத்துழைப்பில் அனைத்து முறைகளிலும் காணப்படுகின்ற நாட்டின் பாதுகாப்பு அரசியல் மற்றும் வன்முறை தொடர்பான விடயங்கள் உள்ளடங்களான விடயங்கள் தெளிவூட்டப் படுத்தப்படவுள்ளன மேலும் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது “உலகலாவிய தடங்கல்களைக் கொண்டதொரு சகாப்தத்தில் பாதுகாப்பு எனும் தொணிப்பொருளிலும், 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கானது வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல் எனும் தொணிப்பொருளின் கீழ் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இப் பாதுகாப்பு கருத்தரங்கிற்கான ஏற்பாட;டிற்கான பிரதான அனுசரணையானது நொரிங்கோ குழுவினால் வழங்கப்படுவதோடு பெல்ஸ்பெட்ஸ்வ்நெஷ்டெக்னிகா கம்பனியானது இணை அனுசரணையை வழங்குகின்றன (நிறைவு) Sports Shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News