Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2019 19:59:16 Hours

புதிய இராணுவ தளபதி பதவியேற்பின் பின்பு பங்கேற்றிக் கொண்ட முதல் நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியேற்றதன் பின்பு இராணுவ லொஜஷ்டிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வானது இம் மாதம் (22) ஆம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவை கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பட்டமளிப்பு பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கி முழுமையாக 36 அங்கத்தவர்கள் இந்த பயிற்சிகளை நிறைவு செய்திருந்தனர்.

விமானப்படையைச் சேர்ந்த ஒருவரும், கடற்படையைச் சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷம், பாகிஸ்தான், செம்பியா, மாலைதீவைச் சேர்ந்த ஆண், பெண் அதிகாரிகள் மொத்தமாக நான்கு பேர் இராணுவ லொஜஷ்டிக் கல்லூரியின் பயிற்சி இலக்கம் 5 கீழ் இந்த பயிற்சியை நிறைவு செய்தனர்.

இந்த பட்டமளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ லொஜஷ்டிக் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் H.A.M பிரேமரத்ன அவர்கள் வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் மங்கள விளக்குகள் ஏற்றி நாட்டிற்காக உயிர்களை நீத்த இராணுவத்தினர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்து.

முதலில் இராணுவ லொஜஷ்டிக் கல்லூரியின் பயிற்சி நெறிகள் தொடர்பான காணொலிகள் மேடையில் எல்.ஈ.டி திரைகளின் மூலம் காண்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த நிகழ்வின் வரவேற்பு உரையினை பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் H.A.M பிரேமரத்ன அவர்கள் ஆற்றினார்.

அதனை தொடர்ந்து இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களினால் பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த பயிற்சி நெறியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற திறமையான அதிகாரியாக இலங்கை மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் N.D.U.I.D டி சில்வா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் சிறந்த தளவாட திட்டமிடலாராக (Logistic Planner) பொது சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் M.P சிறிவர்தன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை கௌரவித்து இராணுவ லொஜஷ்டிக் கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் H.A.M பிரேமரத்ன அவர்களினால் ‘Golden Log’ நினைவுப் பரிசு மேடையில் வைத்து தளபதிக்கு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு பட்டமளிப்பு நிகழ்வு நிறைவடைந்தது.

பயிற்சி நிறைவுகளை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் இந்த கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள் அனைவரும் இராணுவ தளபதியுடன் குழு புகைப்படத்திலும் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ செயலாளர் நாயகம், இராணுவ பொது நிர்வாக பிரதானி, மாஸ்டர் ஜெனரல் போர்கருவி, உபகரண மாஸ்டர் ஜெனரல், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | nike air force 1 shadow , eBay