Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2019 19:11:00 Hours

இராணுவத்திற்கு சிறந்ந விளையாட்டு விருது

இந்த ஆண்டிற்கான ஜனாதிபதி விளையாட்டு விருதானது இலங்கை இராணுவத்திற்கு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் சான்றிதழ் மற்றும் ஜனாதிபதி கேடயங்களை வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டன.

இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள் மற்றும் தடகள போட்டிகளில் பங்கு பற்றி சாதனைகளை நிலை நாட்டியதன் நிமித்தம் இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் செயலாளரும் இலங்கை மின்சார பொறியியல் படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் S.P.A.I.M.B சமரகோன் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் கௌரவத்திற்குரிய ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதுகள் 2017 / 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

விருது வழங்கும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Nike release | Air Jordan Release Dates 2020