Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st August 2019 18:41:18 Hours

இராணுவ மூத்த உயரதிகாரிகள் மூவருக்கு விசிஷ்ட்ட சேவா விபூஷண பதக்கங்கள் வழங்கி வைப்பு

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பிரகாரம் இராணுவ மூத்த உயரதிகாரிகள் மூவருக்கு விசிஷ்ட்ட சேவா விபூஷண பதக்கங்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் இம் மாதம் (01) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியும், கூட்டுப்படைத் தளபதி மற்றும் படைக்கலச் சிறப்பிணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படையணியின் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் L.F கஸ்த்தூரியாரச்சி, முன்னாள் ஆளனி நிருவாக பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவிந்திர பெரேரா போன்ற உயரதிகாரிகளுக்கு இந்த பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யுத்த நிறைவின் பின் சமாதானத்திற்கான 'தஷவர்ஷாபிஷேகாயா', ஒரு தசாப்தம் நிறைவிற்கு இணையாக, போர்வீரர்களுக்கு கௌரவ பதக்கங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட போது அச்சந்தர்ப்பத்தில் சமூகமளிக்க முடியாத இந்த உயரதிகாரிகளுக்கு இராணுவ தளபதி அவர்களினால் பாராட்டுக்கள் தெரிவித்து வழங்கி வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன மற்றும் ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களும் இணைந்து கொண்டனர்.

வி.எஸ்.வி பதக்கமானது 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி வர்த்தமானியில் உள்ள விதிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளன. சேவையிலுள்ள பாதுகாப்பு படையினர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் ஒழுக்கமான, உன்னதமான, கீழ்ப்படிதல், விதிமுறைகள் களங்கமற்ற சேவையை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது. url clone | New Releases Nike