Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd July 2019 23:37:51 Hours

தென் ஆசிய விளையாட்டு செயலகம் திறந்து வைப்பு

விளையாட்டுதுறை அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் தேசிய தேர்வுக்குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் தென் ஆசிய விளையாட்டு செயலகம் இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. டிசம்பர் 1-10 திகதிகளில் நேபாளத்தின் கத்மடுவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (எஸ்ஏஜி) -2019 இல் 632 விளையாட்டு வீரர்கள் / ஆண் / பெண்கள் போட்டியிட இருக்கின்றார்கள்.

தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் மதிப்புக்குரிய ஹரின் பெர்ணாண்டோ, தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, விளையாட்டு அமைச்சின் செயலாளர் திரு சூலானந்த பெரேரா, விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு தம்மிக முத்துகல, இராணுவ விளையாட்டுதுறை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க தேசிய தேர்வுக்குழுவின் பிரதான தொடர்பாடல் அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் P.M.R பண்டார மற்றும் தேசிய தேர்வுக் குழுவின் செயலாளர் திரு R. A குலரத்ன அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாடா வெட்டி திறந்ததின் பின்னர், அதிதிகள் தேசிய விளையாட்டு அறிவியல் கழகத்தின் (என்ஐஎஸ்எஸ்) இரண்டாவது மாடியில் உள்ள புதிய எஸ்ஏஜி செயலக வளாகத்திற்குள் உட்சென்று 26 இராணுவ அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் அலுவலகங்களையும் பார்வையிட்டனர்.

2019 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் நியமிக்கப்பட்டார். தடகளத் துறையின் பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கையிலுள்ள இந்த வினையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டனர். Running Sneakers Store | Men's Sneakers