Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2019 17:31:59 Hours

683 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய கட்டளை தளபதி நியமிப்பு

கஜபா படையணியைச் சேர்ந்த கேர்ணல் ஹெட்டியாரச்சி அவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள 683 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக இம் மாதம் (8) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.

புதிதாக பதவியேற்ற கட்டளைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் கட்டளைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நாட்டபட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 7 ஆவது கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இதற்கு முன்பிருந்த கட்டளைத் தளபதியான கேர்ணல் துமிந்த ஜயசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணியகத்தின் கேர்ணல் (A) பதவிக்கு இடமாற்றம் நிமித்தம் மாறிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | adidas poccnr jumper dress pants size