Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2019 20:48:51 Hours

ஆனையிறவில் ஹசலக காமினியின் நினைவு தின நிகழ்வு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஹசலக குலரத்ன அவர்கள் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தார்.

இவரது சேவையை பாராட்டி இவரது ஞாபகார்த்தமாக ஆனையிறவில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூபி வளாகத்தினுள் 28 ஆவது வருடாந்த நினைவு நிகழ்வு இம் மாதம் (14) ஆம் திகதி இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக் காட்டலின் கீழ் 66, 662 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த நினைவு தூபி வளாகத்தினுள் ‘பிரித்’ தான நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கோப்ரல் காமினி குலரத்ன அவர்களுக்கு கௌரவ அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் வருகை தந்தார்.

வருகை தந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியை 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்கள் வரவேற்றார். பின்னர் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு , நாட்டிற்காக உயிர் தியாகம் படை விரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களினால் காமினி குலரத்னவின் நினைவு தூபிக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் போது சிங்கப் படையணியின் பேண்ட் இராணுவ மரியாதையும், வீடியோ கண்காட்சிகளும் இந்த நினைவு தூபி வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கோப்ரல் காமினி குலரத்ன அவர்களது தாயாரான திருமதி S.G ஜூலியட் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள், 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி, 661, 662, 663 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் கலந்து கொண்டனர்.

எல்டிடிஈ பயங்கரவாதிகளினால் புல்டோஷர் கனரக வாகனத்தில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு ஆனையிறவு இராணுவ முகாமிற்கு எதிராக தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வதற்கு வரும் சமயத்தில் இந்த கோப்ரல் காமினி குலரத்ன இதற்கு எதிராக கைக்குண்டொன்றை தாக்கி தனது உயிரை தியாகம் செய்து எல்டிடிஈ யினரது தாக்குதலை முறியடித்தார். இந்த பாரிய சேவையை பாராட்டி இவருக்கு பரம வீர விபூஷன பதக்கம் கிடைக்கப் பெற்றது.

ஆனையிறவு முகாமில் 1990 ஆம் ஆண்டு எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு ஒரு முக்கியமான இலக்கு நிலையமாக அமைந்திருந்தது. யாழ் குடா நாட்டை கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய ரீதியாக இருந்த இராணுவ முகாமை கைப்பற்றுவதற்கு எல்டிடிஈ பயங்கரவாதியினர் 5000 பேர் சுற்றி வளைத்து தாக்குதலை மேற்கொண்டனர். அச்சமயத்தில் அந்த முகாமில் இராணுவத்தினர் 600 பேர் நிலை கொண்டிருந்தனர்.

எல்டிடிஈ யினர் புல்டோஷர் கனரக வாகனத்தில் வெடிக்குண்டுகளை நிரப்பிக் கொண்டு ஆனையிறவு முகாமிற்கு பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கு வரும் சமயத்தில் ஹசலக காமினி இந்த தாக்குதலை முறியடிக்கும் நோக்குடன் இந்த புல்டோஷர் வாகனத்திற்கு கைக்குண்டொன்றை வீசி அந்த வாகனத்தில் பயணித்த நான்கு தீவிரவாதிகளை கொன்று தனது உயிரையும் அர்ப்பணித்து இந்த தாக்குதலை முறியடித்தார்.

கோப்ரல் குலரத்ன 1966 ஆண்டு தனது குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்தவராவர். இவரது குடும்பத்தில் நான்கு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவர் ஹசலக ரனசிங்க பிரேமதாஸ மஹா வித்தியாலயத்தில் கல்விகளை மேற்கொண்டு 1987 ஆம் ஆண்டு 6 ஆவது சிங்கப் படையணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | Nike SB