Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2019 12:06:09 Hours

யாழ் படையினர் வசமிருந்த 27.4 காணி விடுவிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் நல்லெண்ணத்தினை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் யாழ் குடிமக்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக யாழ் படையினரால் 26.4 ஏக்கர் காணி பலாலி பிரதேசத்திலும் RCTMS பாடசாலையின் அரசாங்க நிலத்தின் 1 ஏக்கர் காணியும் மைலடி பிரதேசத்தின் நில உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வானது (12) ஆம் திகதி பலாலி வடக்கின் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஒத்துழைப்புடன் இக் காணியின் ஆவணங்கள் யாழ் மாவட்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் முன்னிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு எஸ் முரலிதரன் அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. மேலும் தெல்லிப்பலை மாவட்ட செயலாளர் திரு எஸ் சிவசிரி மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றியதுடன், இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் இந்த நல்லெண்ணத்தின் நோக்கம் பற்றி விளக்கினார், மேலும் எதிர்காலத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை செய்து பொதுமக்களின் கவலைகளுக்கு இடமளிக்காமல் எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட ஆளுநர் ஆவணங்களை மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்தார். Best Sneakers | Sneakers