Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2019 18:22:07 Hours

55 ஆவது படையினரால் ஏழை குடும்பத்திற்கு தற்காலிக இருப்பிடம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொட்டுவகொட அவர்கள் தனது படையினருடன் கடைக்காடு பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் வாழும் ஏழை குடும்பத்திகற்கு நிவாரணம் வழங்கிய முதலாவது நபராவார். அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி திடிரென ஏற்பட்ட தீயினால் தென்னை ஓழையால் அமைக்கப்பட்ட இவர்களது வீடானது எரிந்து நாசமாகியுள்ளதை தொடர்ந்து இந்த தற்காலிக இருப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டது.

இந்த துயரமான சம்பவம் குறித்து கிடைத்த தகவலுக்ககைமய 55 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்கள் தனது படையினர்களுடன் விரைந்து வந்து இக் குடும்பம் வீடற்றவர்களாக இருந்ததைக் கண்டறிந்து, அவர்கள் தங்குவதற்கு எந்தவிதமான தங்குமிடமும் இல்லாமல் உதவியற்றவர்களாக இருந்ததை கண்டு அவர்களுக்கு உதவ முன் வந்தனர். ஆதனைத் தொடர்ந்து பிரிகோடியர் கொட்டுவகொட அவர்கள் எந்தவொரு தாமதமும் இல்லாமல் உடனடியாக நடவடிக்கைகளை முன்னிட்டு சில தகரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு அவர்களின் செலவில் ஒரு தற்காலிக தங்குமிடம் வீடொன்றை அமைத்து கொடுக்க தனது படையினர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த மனிதாபிமான திட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட இராணுவ படையினர்களின் பங்கேற்றன.

சில மணிநேரங்களுக்குள் படையினர்களால் அவர்களுக்காக தற்காலிக வீடு அமைத்து கொடுக்கப்பட்டதுடன் இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, குடும்பத்திற்கு பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன, மேலும் பல உதவிகளைப் பெறுவதற்காக அந்தந்த பகுதியில் உள்ள அரச அதிகாரிகளுக்குத் படையினர்களால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டன. Best Sneakers | Nike Off-White