Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th June 2019 18:23:17 Hours

வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் களிகூர்ந்த இன்னிசை நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தால் கடந்த (23) ஞாயிற்றுக் கிழமை பராக்கிரமபுர பொது மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்சியில் பதவி பராக்கிரமபுர சிறிபுர வெலிஓய போன்ற பிரதேசங்ளை உள்ளடக்கிய பிரதேசவாசிகள் கலந்து கொண்டதோடு கடந்த சனிக் கிழமை (22) மாலை வேளை இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ் இன்னிசை நிகழ்சிவை பிரபல்யமான 'சீதுவ சகுரா' எனும் பேண்ட் வாத்தியக் குழுவினர் நிகழ்த்தியுள்ளனர். ஆத்துடன் இந் நிகழ்விற்கு பிரபல்யமான அறிவிப்பாளர்களான நதீக கருணாநாயக்க மற்றும் சுரங்கி கொடிதுவக்கு போன்றோர் தொகுத்து வழங்கியிருந்தனர். ஆத்துடன் இவ் இன்னிசை நிகழ்வானது கடந்த ஏப்பரல் 21ஆம் திகதியன்று தேசிய தௌகீத் ஜமா அத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பயங்காரவாத தாக்குதலின் பின்னர் அச்சலினால் காணப்பட்ட பொது மக்களிடையேயான பயத்தை போக்கும் நோக்கில் தற்கால பாதுகாப்பு நிலமை சீர்படுத்தப்பட்டுள்ளமையை எடுத்துக் காட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூகத்தினரிடையே தற்கால நிலைமை தொடர்பான அச்சத்தை போக்கும் நோக்கில் அனைத்து படைத் தலைமையகங்களிலும் இவ்வாறான இன்னிசை நிகழ்வை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 62ஆவது படைத் தலைமையக பிரிகேடியர் தம்மிக்க ஜயசிங்க அவர்ளினால் ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இம் மாலை நேர இன்னிசை நிகழ்வை பிரபல்யமான கலைஞர்களான சேனாநாயக்க வெரலியத்த பிரியங்கர பெரேரா தயாரத்ன பெரேரா சுசில் பெணான்டோ டோனி ஹசன் ஜொலி சீயா சுப்ரியா அபேசேகர அவந்தி நிரஞ்சலா மற்றும் திரு அமில நதீஷானி போன்றோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

இதன் போது பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கலந்து கொண்டதோடு 21 54 56 61 மற்றும் 62ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth