Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th June 2019 23:53:36 Hours

வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்காக 8500 மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சுற்றுச்சூழல் நட்பு மாணவர்கள், தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழக வேளாண் அறிவியல் பீடம் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், நாதண்டிய தம்மிசாரா கல்லூரி, அசோசியேட்டட் மோட்டார்வேஸ் நிறுவனம், இளைஞர்களின் நம்பிக்கை சுற்றுச்சூழல் அமைப்பு , திரு சாரங்கா திசசேகர, திருமதி ஷானுடி பிரியசாத் மற்றும் திருமதி துலிகா மாரபன, போன்றோர் வில்பத்துவில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் மரநடுகைத் திட்டத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிற்கு உதவியளிக்கும் முகமாக 8500 மரக்கன்றுகள் இராணுவத்தினருக்கு இம் மாதம் (15) ஆம் திகதி கையளித்தனர்.

பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த மரநடுகை திட்டத்திற்கு 8000 கும்புக் மரக்கன்றுகள் மற்றும் 500 மதிப்புமிக்க மரக்கன்றுகள் வில்பத்து தேசிய பூங்கா, விளாத்திக்குளம் மற்றும் வேப்பல் வனாந்தர பகுதியில் இந்த மரங்கள் நடப்பட்டன. அத்துடன் மரநடுகைத் திட்டத்திற்காக 100 சீமேந்து பக்கட்டுகள், 600 நீள அடி பிவிசி குழாய்கள், 10 தண்ணீர் பெரல்கள்களைக் கொண்ட 50,000.00 ரூபாய் பெறுமதிமிக்க பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் சில வாரங்களுக்குள் 21 ஏக்கர் நிலப்பரப்பில் 45,000 மரநடுகைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மரநடுகைத் திட்டங்கள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, 542 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரவி ஹேரத் அவர்களின் பூரண தலைமையில் இம் மாதம் (15) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் 54 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify