Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2019 13:14:07 Hours

வன்னி படையினரின் சோயா பயிர்ச்செய்கை திட்டத்தின் மூலம் 26விவசாயிகள் பயன்

வன்னி பிரதேசத்தில் தேவைநாடும் மக்களுக்கான சமூக வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் வேண்டுகோளிற்கிணங்க சிலோன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தினால் நீண்ட நாள் சோயா பயிர்ச்செய்கை திட்டமானது போகஸ்வௌ மற்றும் வெஹெரதன்ன கிராம வாசிகளின் விவசாய குடும்பத்தாரிற்கு நன்மை பயர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் பயிர்ச்செய்கை திட்டத்தின் மூலம் சுமார் 10 கிலோ பெறுமதியான சோயா விதைகள் விவசாயிகளின் 13ஏக்கர் காணிகளில் பயிரிடும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப் பயிர்ச் செய்கை காலப்பகுதியில் சிலோன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தால் இப் பயிர்ச்செய்கை நிலத்திற்கான உரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சிறந்த பயனை அடையக் கூடியதுடன் தமது பயிர்ச்செய்கை அறுவடையை சிலோன் பிஸ்கட் தனியார் நிறுவனத்திற்கு பிர நபர்களின் தொடர்பின்றி நேரடியாக வழங்குவதன் மூலம் நிகரான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இயலுமாக காணப்படுகின்றது.

மேலும் இத் திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரோ அவர்களின் கண்காணிப்பின் கீழ் இச் சமூக நலன்புரித் திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது பொது மக்களிற்கு இப் பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்பு கருத்தரங்கும் இடம் பெற்றது. மேலும் இப் பயிர்ச் செய்கையானது 5000ற்கும் மேற்பட்ட பாரிய நிலப்பரப்பில் பயிரிடப்படவுள்ளதுடன் இதன் மூலம் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பத்தாரிற்கு பயனடையக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

இதற்கான முதற்கட்ட பயிர்செய்கையானது 11ஆம் திகதி ஜூன் 2019ஆம் திகதி 260கிலோ தாவர விதைகள் 26 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இத் திட்டமானது 56ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிட்டிய அவர்களின் கண்காணிப்பின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜி ஏ எல் கித்சிரி அவர்களின் ஒருங்கிணைப்பில் சிலோன் பிஸ்கட் தனியார் நிர்வாக பிரதேச மேலாளரான திரு டபிள்யூ ஜி ஜயந்த தர்மசிறி பிரதேச நிர்வாக மேலாளரான திரு டபிள்யூ அஜித் குமார பெணான்டோ மற்றும் 11ஆவது இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரியவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Nike for Men