Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2019 18:32:19 Hours

விஷேட படையணி சேவா வனிதா மகளிர் அணியினர் ‘மிஹிந்து செத் மெதுர’ நிலையத்திற்கு விஜயம்

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக உட்பட விஷேட படையணி சேவா வனிதா மகளிர் அணியினர் அத்ஹிடியவிலுள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ நிலையத்திற்கு இம் மாதம் (12) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்கள்.

நாட்டின் அர்ப்பனிப்பு நிமித்தம் அவயங்களை இழந்து நோய்வாய்ப் பட்டிருக்கும் இராணுவத்தினரது சுபசாதனைகளை பார்வையிடவும், அவர்களது நலன்களை விசாரிக்கும் நோக்கத்துடன் இந்த அணியினர் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன் போது விஷேட படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களும் வருகை தந்து இங்குள்ள இராணுவத்தினரது சுகசெய்திகளை கேட்டறிந்தார்.

அத்துடன் சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களினால் இங்குள்ள விஷேட தேவையுடைய இராணுவத்தினருக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இங்குள்ள இராணுவத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இராணுவ தளபதி அவர்கள் இங்குள்ள படையினரை சந்தித்தபோது அவர்களது நலன்புரி தொடர்பான விடயங்களை கேட்டறிந்து அதற்கான ஒழுங்குகளை பெற்றுத்தருவதாக இராணுவத்தினருக்கு உறுதியளித்தார்.

இங்கு நோய்வாய் பட்டிருக்கும் படை வீரர் ஒருவரினால் வரையப்பட்ட ஓவியமும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் சேவா வனிதா தலைவிக்கு பரிசாக இந்த படை வீரரினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டப்ள்யூ எஸ் ராஜகருணா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.buy footwear | Nike React Element 87