Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2019 18:48:14 Hours

தனியார் நன்கொடையாளர்களால் வில்பத்து மறுமலர்ச்சிக்கு கன்றுகள் வழங்கிவைப்பு

இராணுவத்தின் ஏற்பாட்டில் 'துரிலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் மரநடுகை திட்டத்தினால் பொதுமக்களிடையே இராணுவத்தினருக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்திதந்ததுடன் தனியார் துறைகளினால் இந்த மரநடுகை திட்டங்களுக்கு பாரிய ஒத்துழைப்பை இராணுவத்தினருக்கு வழங்குகின்றனர்.

வணிக முதலீடுகள் மற்றும் நிதி தனியார் நிறுவனத்தின் (Mercantile Investments and Finance PLC) திரு தனுஷ்க பொன்சேகா, செல்வி உதார ஜயசுந்தர, செல்வி ரோஷினி இந்துருவகே போன்ற அதிகாரிகள் இம் மாதம் (11) ஆம் திகதி பகல் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் சந்தித்து 2000 மரக்கன்றுகளை ‘துருலிய வெனுவென் அபி’ எனும் இராணுவ மரநடுகை திட்டத்திற்காக வழங்கி வைத்தார்கள்.

நாட்டின் வன வளத்தினை பாதுகாக்கும் நோக்குடனும், வில்பத்து மறுமலர்ச்சிகளுக்காகவும் கும்பக், மீ, மகோசா, தேக்கு, மஹோகனி போன்ற மரங்கள் இந்த தனியார் நிறுவனத்தினால் இராணுவ தளபதிக்கு கையளிக்கப்பட்டன.

இராணுவ தளபதி இந்த மரநடுகை திட்டத்தின் மூலம் எதிர்கால சந்ததியினரின் சிறந்த எதிர்காலத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் இந்த மரநடுகை பணியானது இராணுவத்தினரால் நாடளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றது என்று வணிக முதலீடுகள் மற்றும் நிதி தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்த வேளையில் விளக்கி கூறினார்.

இறுதியில் வணிக முதலீடுகள் மற்றும் நிதி தனியார் நிறுவனத்தின் முகாமையாளர் திரு தனுஷ்க பொன்சேகா அவர்களினால் இராணுவ தளபதிக்கு மரக்கன்றொன்றும் இராணுவ தளபதியின் பணிமனையில் வைத்து கையளித்தார். Sports News | GOLF NIKE SHOES