Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

11th June 2019 17:19:15 Hours

54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியுயர்வு

புதிதாக மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்ட 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களுக்கு மன்னார் தள்ளடியில் அமைந்துள்ள 54 ஆவது படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (4) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் அன்றைய தினம் சமய ஆசிர்வாத அனுஷ்டானங்கள் மதகுருவின் தலைமையில் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் சிறப்புரை ஒன்றையும் ஆற்றினார்.

இந்த நிகழ்வில் 54 ஆவது படைத் பிரிவின் கீழிருக்கும் படைத் தலைமையகத்தின் தளபதிகள், படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.