Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2019 12:53:31 Hours

யாழ் பாதுகாப்பு தலைமையகத்தினால் நீர் திட்டத்திற்கு ஊக்குவிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சாவகச்சேரி நகரசபை நகராதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வேண்டுகோளுக்கு இணங்க தமது சொந்த நிதியில் உதயசூரியன் கிராமத்தில் சாவகச்சேரியிலும் நிறுவப்பட்ட குடிநீர் திட்டமொன்றை பெற்று மூன்று நீர் சேமிப்பு தொட்டிகளையும், இரண்டு குழாய் கிணறுகளையும் இராணுவ பொறியாளர் படையினரின் தொழில்நுட்ப பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன..

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் நகராதிபதியான திருமதி சிவமங்கை இராமநாதன் அவர்களினால் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு இராணுவத்தினரது உதவியுடன் இந்த நீர் வசதிகளுக்கான தீர்வு கிடைக்கப்பெற்றது.

இந்த திட்டத்திற்கான ஆரம்ப ஆய்வின் பின்பு, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இந்த மூன்று தொட்டிகளை கட்டுவதற்கும், இராணுவத்தை இணைப்பதற்கும், மேலும் இராணுவச் செலவில் இரண்டு குழாய் கிணறுகளை நிறுவுவதற்கு உதவிகளை வழங்கினார்.

இந்த பணிகள் 52, 523 ஆவது படைத் தலைமையங்களின் பூரண ஏற்பாட்டுடன் 5 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன.

முழுமையாக்கப்பட்ட இந்த நீர் திட்டமானது இம் மாதம் (10) ஆம் திகதி திங்கட் கிழமை 51 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன மற்றும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் நகராதிபதி திருமதி சிவமங்கை இராமநாதன் அவர்களது பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேலும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் எஸ் எஸ் வடுகே மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Nike Sneakers | Men's Footwear