Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2019 16:43:12 Hours

இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பு

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நுழைவாயில், பெயர் வாரியம், காவல் நிலையம், இராணுவ அணிவகுப்பு மரியாதை நிலையம் இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையங்களை நிர்மானிப்பதற்கான நிதிகள் பொது சேவைப் படைத் தலைமையகம், கவுன்சில் அங்கத்தவர்கள், கட்டளை அதிகாரிகள், ஆனைச்சீட்டு உத்தியோகத்தர்களது நிதி அனுசரனையுடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில் படையணியைச் சேர்ந்த அனைவரது பங்களிப்புடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றது.bridge media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov