Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2019 13:24:50 Hours

மூன்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் மீது தடை விதிப்பு ( என்.டி.ஜே ,ஜே.எம்.ஐ ,டப்ல்யூ.ஏ.எஸ்)

கடந்த திங்கட்கிழமை 13 ஆம் திகதியன்று தேசிய தௌஹித் ஜமாத் (என்.டி.ஜே), ஜமாதி மில்லாதி இப்ராஹிம் (ஜே.எம்.ஐ) ,விலாயத் அஸ் செய்லானி (டப்ல்யூ.ஏ.எஸ்) ஆகிய அமைப்புகள் மீது பொது பாதுகாப்பு கட்டளை பிரிவு ( பிரிவு 40) இன் கீழ் அதிவிஷேட வர்த்தமானி இல 2123/2 மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ் தடைவிதிப்பானது பொது பாதுகாப்பு கட்டளை பிரிவு 5 இன் கீழ் அவசர கால சட்ட இல 01 2019 இன் 75(1) ஆவது சட்டத்தின் மூலம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அதிகாரத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆதன்பிரகாரம், யாராவது இவ் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருத்தல் அல்லது தலைமை தாங்கினால் அல்லது இவ் அமைப்புகளுடன் இணைதல் அல்லது அணிதல்/ காட்சிப்படுத்தல்/ ஏற்றுதல்/ அல்லது சீருடைகள், உடுப்புகள், சின்னங்கள், கொடிகள், இலட்சினைகள் போன்றவெற்றை வைத்திருத்தல் அல்லது ஏதாவது அமைப்பை ஒழுங்குபடுத்தல் அல்லது உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளல் அல்லது உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது பணம் மற்றும் உபகரண பங்களிப்பு செய்தல் அல்லது ஏதாவது கொடுக்கள் வாங்களில் ஈடுபடல் அல்லது அவர்களின் பிரசுரங்களை வெளியிடுதல் அல்லது யாரையாவது உறுப்புரிமை பெற்றுக்கொள்ள துhண்டுதல் அல்லது இதே நோக்கத்துக்காக கூட்டம் ஏற்பாடு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் சட்டக் குற்றமாகும் .அதேபோல் அசையும் அல்லது அசையா சொத்து அல்லது குறித்த அமைப்புகளுக்கு சொந்தமான ஏதாவது சொத்துகள் அல்லது நிதிகளானது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படும். Nike Sneakers Store | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5