Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2019 13:27:03 Hours

வவுனியா பௌத்த ஆலயம் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா ஸ்ரீ போதி தக்ஷிமராம பௌத்த ஆலயத்தின் சுற்றுமதில் மற்றும் பௌத்த சிலை மற்றும் கணேஷர் சிலை ஆகியவெற்றின் திறப்பு விழா நிகழ்வானது கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நன்கொடையாளர்கள், வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா,எஸ்.எஸ்.பி மற்றும் அழைப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம் பெற்றன.

இந்த நிகழ்வானது வன்னி நகரத்தின் ஸ்ரீ போதி தக்ஷிமராம பௌத்த ஆலயத்தின் சியம்பலகஸ்வெவ விமலசார தேரர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

வவுனியா மாநகர சபை அங்கத்தவர் திரு ஜனக ரவிந்ர பெர்ணான்டோ அவர்களினால் கணேஷ்சர் சிலையினை அன்பளிப்பு செய்த அதேவேலை பம்பலபிட்டி ராஜ ஜுவலர்ஸ் உரிமையாளர்களான திரு. அதுல எலியபுர மற்றும் திருமதி அசங்க எலியபுர அவர்களினால் புத்தர் சிலை அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த ஆலயமானது இந்து மற்றும் பௌத்த மதத்தவர்களுடைய பிரபல்யமான இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Sports Shoes | GOLF NIKE SHOES