24th April 2019 21:03:24 Hours
பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் தளபதிகள் படைப் பிரிவுகளின் தளபதிகளின் மற்றும் படையகத்தின் படைத் தளபதிகளின் அறிவுறுத்தலுக்கமைய அவசரதேடுதல் நடவடிக்கைகளுக்காக நூற்றுக்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களை வர்தமானி அறிவித்தலின்படி நாடு பூராகவும் சோதனை பணிகளை ஆரம்பிக்கவும் தேடுதல் நவடிக்கைகள் மற்றும் கைது பத்திரம் இல்லாமல் கைதுசெய்வதற்கும் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனஹே அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 37 இராணுவ அதிகாகரிகளும் 1783 க்கும் அதிகமான படையினர்களை முக்கிய பிரதேசங்களான களுபோவில, மல்வான, மினுவான்கொட, கொஹுவல, களுபோவில, தெஹிவளை, மட்டக்குளி, தெமட்டகொட, பனந்துறை, பத்தரமுல்ல, ரத்மலான,கேஸ்பவா ஹன்வெல் புத்தளம், வென்னப்புவ, தங்கொடுவ, கொஸ்வத்த, பண்டாரகம, ஹொரண, கேகாலை, வரக்கபொல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் பலங்கொட போன்ற பிரதேசங்களில் ரோந்து பணிகளுக்காக அமர்தப்பட்டுள்ளன.
அதற்படி இராணுவத்தினரால் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் மத இஸ்தானங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன் நீர் கொழும்பு, கொழும்பு, இரத்மலானை, தெஹிவளை, கொலொன்னாவ, ராஜகிரிய, மஹரகம, தலங்கம, சிலாபம், மாரவில, கல்பிட்டிய, தலவில,எலுவாங்குல, மதும்மலசூரிய, குருநாகல், குரனா, குலியப்பிட்டிய, நிகவெரடிய, பொத்துஹெர, பொல்கஹவெல, வாரியபொல, காலி, ஹினிதும, ஜின்தொட, ஹிரம்புரம், தேவடவெலிகம, மாத்தறை, அதுரலிய, அக்குரஸ்ஷ, கொடபொல, ஹொரகொட, பலபிடிய, பணாபிடிய, கொடபிடிய, கபுவட, ரம்புக்கனகம, கேகாலை, ரம்புக்கன, புளுத்கோஹுபிடிய, வராகப்பொல, யட்டியந்தொட்ட, தும்மலதெனிய, மாவனெல்ல, கொட்டியாகும்புற, ருவன்வெல்ல, எஹெலியகொட, பலங்கொட, கஹவத்த, துன்கா, உதவாளா,போன்ற பிரதேசங்களில் வாகனம் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ரோந்து சுற்றிவளைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், தொடருந்து, ரயில் பாதைகள், தேவாலயங்கள் கோயில்கள், மின் நிலையங்கள், அரசாங்க கட்டிடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பஸ் நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள், எண்ணெய் தொட்டிகள், நீர் குளங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சந்தை, பாலங்கள், பொலிஸ் நிலையங்கள், அனைத்து தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர பயணங்கள் போன்ற இடங்களுக்கு மகளிர் சேவையினரின் உதவியுடன் பொலிஸ் ஆகியோருடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் அவசியமான பாதுகாப்பை வழங்கியுள்ளன.
அதற்கமைய கிழக்கு மாகாணத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணஜயசேகர அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 45 இராணுவ அதிகாகரிகளும் 1136 க்கும் அதிகமான படையினர்களை கிழக்கின் முக்கிய பிரதேசங்களான திருக்கோணமலை, மட்டக்களப்பு, கல்லடி, பூனானி வாகரை, தரவிகுளம்,அம்பாற,அக்கரைபற்று,கோமாரி,பொத்துவில், வவுனாதீவூ, மணம்பிட்டிய திருக்கோவில் மகாஓயா, மல்வத்த, நிலாவேலி, திரியாய, தெஹிவட்டகந்த,லேவெருகல்,கிண்யா,மொறவெவ,மூதூர், கல்முனை, பாசிக்குடா மற்றும் தோப்பூர் போன்ற பிரதேசங்களில் அனைத்து படைப் பிரிவுகள் மற்றும் படையகங்களின் படையினர்கள் சாலைத் தொகுதிகள் சோதனை சாவடிகள் மொபைல் ரோந்துகள் மற்றும் நிலையான கடமைகளைத் தொடங்கியுள்ளன.
அதேபோல் வன்னி பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 52 இராணுவ அதிகாகரிகளும் 970க்கும் அதிகமான படையினர்களை வன்னியின் முக்கிய பிரதேசங்களான அனுராதபுரம், வவுனியா, மன்னார், கஜசிங்கபுர, கல்லடி, மந்தோட்டம், பெசலீ, கொக்கலிய, கனகராயன்குளம், நவாக்குளம், ஈச்சான்குளம், வெல்லன்குளம், நந்தன்கடல், பதவிய, கச்சனமரதாமடு, கல்குளமா, வெலிஓயா, ஹெலபவவெ, வெடிவட்டகல்லு,போன்ற இடங்களில் ரோந்து,பாதுகாப்புபணிகளில் ஈடுபட்டுள்ளன.
மேலும் வன்னி படையினரால் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி, ருவன்வலிசாய, மற்றும் மதபோதகர்களின் வீடுகள் மசூதி, கோவில்கள்,கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அனுராதபுரம், வவுனியா,திஸ்ஸவெவ, விஜயபுர, கலெட்டவெவ, ஹிடோகம, நெலுபேவ, நாச்சடுவ, சரவஸ்திபுர, புத்தளம் சந்தி, பழைய பஸ் நிலைய நிலையம், கெகிராவ, தந்தரிமலை, கலென்பிந்துநுவர, துனமடலவா, நொச்சியாகம, மடு சந்தி, ஓமந்தை, பெரியதம்பனை, பூந்தோட்டம், புளியங்குளம் சந்தி, கொக்கிலிய,இராபங்கங்குளம், இச்சன்குளம், நிக்கவெவ, யக்கவெவ, ஹால்மில்லவ,தல்கஹவெவ, நொச்சிக்குளம், மராத்தொடை, போன்றபிரதேசங்கிளில் பொலிஸ் மற்றும் மகளிர் சேவையினரின் உதவியுடன் இரவு மற்றும் பகல் முழுவதும் வாகனம் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல் கிளிநொச்சி பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜிதரவிபிரிய அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 10 இராணுவ அதிகாகரிகளும் 491 க்கும் அதிகமான படையினர்களை கிளிநொச்சி முக்கிய பிரதேசங்களான கிளிநொச்சி நகரம், மங்குளம், தர்மபுரம், பரந்தன், ஈரானமடு, பூநகரி, மல்லாவி, துணுக்காய், பூனெரின், வெரவிலில், அக்கராயன்குளம், ஆயங்குளம் மற்றும் 57 65 66 ஆவது படைப் பிரிவுகள் மற்றும் படையகங்களின் கீழ் உள்ள ஏனைய பிரதேசங்கிளில் ரோந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
கிளிநொச்சி படையினர் மிக முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு வாகன பரிசோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளிளும் ஈடுபட்டுள்ளன.
அதேவேலை, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 28 இராணுவ அதிகாகரிகளும் 451 க்கும் அதிகமான படையினர்களினால் யாழ்ப்பாணம், கோப்பாய், தெல்லிப்பாளையம், அலவதி, அச்சுவேலி, முகமாலை, இயகச்சி, கொடைகாமம், கீரமலை, கங்கேசன்துறை, அராலி, காரைநகர், சாவகச்சேரி, சுன்னாகம், நாதகுலிம், கைதடி, எலுத்துமடுவல், பாலை, ஆனையிறவு, மருதான்கேணி, அலாராய், வள்ளை, வித்தத்தாபலை, எல்லன்குளம், வரித்தவிலான் மற்றும் முக்கிய பிரதேசங்களில் படையினர் மிக முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு வாகன பரிசோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை இரவு மற்றும் பகலிலும் ஈடுபட்டுள்ளன.
மேலும் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் மற்றும் வணக்க வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.
ஆந்தவகையில் முல்லைத் தீவு பாதுகாப்பு படையினரால் முல்லைத்தீவு நகரம் அலம்பில் தெற்கு, உடுப்புக்குளம், கல்லாபாடு, முல்லpயாவேலி, குலமுரிப்பு, புதுமத்தலன், நந்திகடல், உடையார்கட்டு, கோஹம்பாகஸ்ஹந்திய, கொக்கிலாய், வள்ளமடம் மற்றும் பிற குறிப்பிட்ட மிக முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு வாகன பரிசோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அதேநேரம் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரிவடுஹே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய அவசர தேவைகளுக்காக கண்டி, பதுள்ள, தியத்தலாவ, ஹட்டன், பசர,நானுஓயா, நுவரெலியா, மொனராகலை, திகன, பலகொல்ல, தெல்தெனிய, அட்டபாஜ், பல்லேகெலே, மாபரீதெனன்னா, மpராஹவத்த, மஜஸ்தோட்டா, பண்டாரவளை, கொடபொவ, பிபில, உமாஓயா, வெல்லவாய, பாடல்கும்புர, அம்பிட்டிய, தென்னகும்புற, பேராதனை, முருத்தலவ, போகம்பர, அஸ்கிரிய, கலகேதர, நாவலப்பிட்டிய, புசல்லவ, கலஹா, கடுகஸ்தொட்ட, வீரவில, கதிர்காமம், தங்காலை, அம்பாந்தோட்டை மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப்பிரிவு, 12 ஆவது படைப்பிரிவு, 111 ஆவது படைப்பிரிவு, 121 ஆவது படைப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளிளும் ஈடுபட்டுள்ளன.
மேலும் 53 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்குட்பட்ட பிரதேசங்களான இனமலுவ, தம்புள்ள, விமானப் படைப்பிரிவு, மற்றும் 533 படைப்பிரிவினர் எம்பிலிப்பிட்டிய, மாத்தளை, புஹுல்வெல்லஅ பண்டாரவளை, கஹகொல்லா, தியத்தலாவ, ஹப்புத்தளை, வெல்லவாய, கொட்டவெஹகரகல, அக்குரன, கடுகஸ்தொட்ட, மரபன, வத்தேகம போன்ற பிரதேசங்கிளில் பரிசோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளிளும் ஈடுபட்டுள்ளன. Asics shoes | adidas Yeezy Boost 350