Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2019 21:27:48 Hours

பயங்கரவாத அமைப்புமற்றும், பயங்கரவாதிகளின் வலையமைப்பு அடையாளம் - இராணுவ தளபதி தெரிவிப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கொழும்பு மாவட்ட ஆயரான மெல்கம் ரஞ்ஜித் அவர்களை நேற்றைய தினம் (22) ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆயர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது அனைத்து ஊடகவியலாளர்களிடமும் முறையான ஒருங்கினைப்பு தேவையென்றும் முக்கியமான தகவல்களை பகிர்வது தொடர்பாக விளிப்புனர்வுடன் செயற்பட வேண்டிய விடயங்களை வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் "யாரையும் குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை ஆனால் இராணுவம் தேடல், கைது மற்றும் சாலைத் தடைகளை நடத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் இன, மத வேறுபாடுகளைத் தவிர, எல்லோரும் அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

இராணுவ தளபதியினால் இச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அவரது விளக்கங்களின் அறிக்கைகள்கீழ்வருமாறு; "நேற்று இரவு ஜனாதிபதியின் தலைமையில், பிரதம மந்திரி, நிதித்துறை அமைச்சர்,பல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களது பங்களிப்புடன் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது மேலும் இத்தகைய சம்பவங்களை மீண்டும் எதிர்காலத்தில் தவிர்க்க கூடிய விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. உதாரணமாக, பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அவர்களுக்கு அதிகாரம் கடமை தொடர்பான விடயங்களும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டி இந்த கலந்துரையாடலின் போது விளக்கமளிக்கப்பட்டது.

இராணுவம் தற்போதைய சூழ்நிலையில் செயல்பட சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை, ஆனால் தேசிய தேவைகளை கருத்தில் கொண்டு, இராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுவதும் துருப்புக்களை ஏற்கனவே நிறுத்தியுள்ளது. 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரங்களை மறுபரிசீலனை செய்வதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்.

சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக நேற்று பொலிஸார் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இன்றும் தொடர்ந்தது இது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும். இந்த பாதுகாப்பு சந்திப்பின் போதுஇராணுவத்தில் சில பொறுப்புகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் எடுக்கப்பட்டன. அத்தகைய ஆராய்ச்சிக்கான தகவலை சீக்கிரம் செய்வதற்காக இராணுவத்திற்கு ஜனாதிபதி அதிகாரங்களை வழங்கி வைத்தார். உதாரணமாக, இந்த அவசரகால சட்டத்தின் கீழ்பொலிஸார் இல்லாமலேயே தேடுதல், வாகனம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒரு நபரை கைது செய்யக்கூடிய அதிகாரங்களும் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.

கூடுதலாக, இந்த அமைப்பின் வலையமைப்பை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதை அடையாளம் கண்ட அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்த விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. நாங்கள் அவர்களின் சர்வதேச இணைப்புகளை, உள்ளூர் வலயமைப்புகள், வெவ்வேறு இடங்களில் பரவும் அனைத்து பிற இணைப்புகள் போன்றவற்றையும் ஆராய்ந்து வருகின்றோம்.

உளவுத்துறையின் பகிர்வின் ஒரு பகுதியினுள் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை நான் தெளிவாகக் கூற வேண்டும். இராணுவத்திற்கான பொறுப்பை நானாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஜனாதிபதியின் தீர்மானத்தின் படி எதிர்காலத்தில் அனைத்து உளவுத்துறையும் ஒருங்கிணைந்து இந்த நாட்டிற்கு சேவையாற்றவேண்டும்.

நான் பொதுமக்களுக்கு இத்தருணத்தில் ஒரு செய்தியை வழங்க விரும்புகிறேன்.இனப்படுகொலை, மத பிரச்சினை வேறுபாடுகளையுமின்றி, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும், இராணுவத்தின் நோக்கங்களை ஆதரிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய பாதுகாப்பிற்காக நாங்கள் உறுதியாக செயற்படுவோம்.

நான் குறைந்தபட்சம் ஒரு குறுகிய காலத்திற்கு அவசரகாலச் சட்ட விதிகளை விதித்திருந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது. எவருக்கும் குற்றம் சாட்ட வேண்டிய அவசியமுமில்லை, ஆனால் இராணுவம் தீவிரமாக தற்போது இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இலங்கை பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே அறிந்திருந்தனர்.

நாம் பெறும் தகவல்கள் போதுமானவை ஆனால் பிரச்சனைக்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. கொடுக்கப்பட்ட விஷயங்களைச் செயல்படுத்துவதில் மற்றவர்களை விட முக்கியமான தகவல்களை நாம் கடந்து செல்கிறோம். நாட்டில் எல்லா இடங்களிலும் இராணுவத் துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அதிகமான துருப்புக்கள் தேவைகளைப் பொறுத்து அணிதிரட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நான் கொழும்பு மாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடிய போது இந்த நிலவரங்களை தடுப்பதற்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும், இது கிறிஸ்தவ, இஸ்லாம் இனங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படாமல் சமாதான முறையில் நாட்டில் இனங்களுக்கு இடையில் சமாதானம் நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்துக்களை ஆயர் இராணுவ தளபதிக்கு வலியுறுத்தினார்.

இந்த பயங்கரவாத அமைப்பானது சிறியது, ஆனால் அதன் வெளிநாட்டு இணைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றனர் அத்துடன் வெளிநாட்டு பயிற்சிகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (முடிவு) affiliate tracking url | Nike