Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2019 13:35:02 Hours

ஐ நா உயிர் நீத்த இயந்திரவியல் காலாட் படையிணியின் படையினரின் வீடு புதுபித்து திறந்து வைக்கும் நிகழ்வு

இயந்திரவியல் காலாட் படையிணியின் அதிகாரிகள் மற்றும் படையினரால் சமிபத்தில் மாலி ஐ நா அமைதிகாக்கும் பணியில் உயிரை தியாகம் செய்த சாஜன் எஸ்.எஸ் விஜகுமார அவரின் குடுபத்தின் மீது அக்கறை செலுத்தும் நிமித்தம் இயந்திரவியல் காலாட் படையிணியின் தளபதியும் இராணுவ தலைமையகத்தின் ஊடக பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்களின் முன் முயற்ச்சியால் பொல்பித்திகம பிரதேசத்தில் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களால் இராணுவ சேவா வனித்தா பிரிவு மற்றும் படையினர் விவகாரப் பணியகத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய இயந்திரவியல் காலாட் படையிணியின் ஒருகிணைப்பில் இந்த புணர் நிர்மாண பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

மேலும் இயந்திரவியல் காலாட் படையிணியின் தொண்டர் படையினர்களால் தங்கள் தொழிநுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி புதுப்பித்துள்ளன. இக் குடும்பத்தில் இரு மகள்களுடன் கணவனை இழந்து வாழும் இவர்களுக்கு முழுமையாக தேவைகளை மதிப்பீடு செய்த பின்னர் இந்த முன்முயற்சியை மேற்கொண்டன அத்துடன் மூன்று மாத நினைவுட்டலுக்கு முன் 'பிங்கம தானம் (நினைவு நாள்) சில வாரங்களில் இடம் பெறவுள்ளது.

இந்த நிகழ்வானது பொல்பித்திகம இயந்திரவியல் காலாட் படையிணியின் தளபதியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கேர்ணல் எஸ்.ஜே பிரியதர்ஷன சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையிணியின் சாஜன் மேஜர் மற்றும் படையினரும் இணைந்து (20) ஆம் திகதி சனிக்கிழமை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் மிகவும் எளிமையான நிகழ்வில் சார்ஜன் குடும்பத்திற்கு புதுப்பிக்கப்பட்ட வீடு முறையாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதான அதிதி அவர்களால் புதுப்பித்துள்ள வீடு ரிபன் வெட்டி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிக மங்கள விளக்கேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிரிகேடியர் அத்தபத்து அவர்களால் இக் குடும்பத்தினருக்கு இறந்தவர்களின் நினைவுகூறும் நிமித்தம் ஒரு பரிசும் வழங்கப்பட்டது. Mysneakers | Womens Shoes Footwear & Shoes Online