Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd April 2019 17:36:48 Hours

தொடர்ந்து இராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள குண்டு தாக்குதலின் நிமித்தம் இராணுவ தளபதி அவர்களின் பணிப்புறைகமைய இராணுவ தலைமையகத்தின் செயற்பாட்டு பணியகத்தினரால் அதிகபடியாக குண்டு தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட பிரதேசங்களில் அவசரகால பாதுகாப்பு தேவைகளுக்காக இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயற்கும் படைப்பிரிவுகளின் படையினர்களை ரோந்துப் பணிகளுக்காக அனுப்பி வைக்க இராணுவ தலைமையகம் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளன. அதற்கமைய ஈஸ்டர் நாளன ஞாயிறுக்கிழமை (21) ஆம் திகதி தேவாலயங்களில் இடம் பெற்ற பிரார்த்தனையின் போது ஏற்பட்ட குண்டு தாக்குதலில் குடியிருப்புக்கள், மதகுருமார்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு சமய இடங்கள், முக்கிய நிறுவனங்களின் பெறும்பாலனோர் 200 க்கும் அதிகமானோர் கொள்ளப்பட்டதுடன் 465 பேர் காயமடைந்துள்ளதில் அதிகமானோர் பக்தர்களும் மதபோதகரும் உள்ளடங்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான கொச்சிக்கடை, நீர்கொழும்பு தெமடகொட, தெஹிவல, மட்டக்களப்பு பிரதேசம் மற்றும் கொழும்பு சங்கிரிலா, கிங்ஸ்பரி மற்றும் சினமன் கிரேன்ட் ஹோட்டல் போன்ற இடங்களில்பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பணிகளுக்காகஅதிகலவான இராணுவம், பொலிஸ் படையினரும் ஈடுபட்டுள்ளன. அதன்படி கொழும்பில் திடிரென ஏற்பட்ட குண்டுவெடிப்பிற்குப் பின்னர் விரைவில் ஆயிரம் இராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பபட்டுள்ளது என்று இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்கள் பாதுகாப்பு அமைச்சு ஊடக சந்திப்பின் போது தெரிவத்துள்ளார்.

அதன்படி குற்றவாளிகள் நீதிக்கு கொண்டு வரப்படும் வரை பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினர் இராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் சந்தேகத்துக்கு இடமான செயல்கள் தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது இராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்;கு தொடர்புகொள்ள வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அவர்கள் ஊடக சந்திப்பின் போது இந்த குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புடையவர்களை கண்டறிந்து குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் மட்டக்களப்பு சியோன் தேவலாயத்தில் ஈத்தர் பிரார்த்தனையின் போது கொல்லப்பட்டவர்களை இராணுவ படையினர்கள் தங்கள் உறவினர்களுக்கு அடையாளம் காண்பித்து ஒப்படைப்பதற்கும், குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும்வரை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளன.

அதன்படி கிழக்கு பாதுகாப் படைத் தளபதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயரை சந்தித்ததுடன் தேவாலயங்கள் அமைந்துள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பாசிக்குடா போன்ற பிரதேசங்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமை 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய திருக்கோணமலை பிரதேசத்தில இதேபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு, ஆளுநர், மாவட்ட செயலாளர், டிஐஜி மற்றும் பாதுகாப்புப் படையினர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்கள் மேற் கொள்ளப்பட்டுநடைபெற்று வருகின்றன.Nike air jordan Sneakers | Air Jordan Release Dates Calendar