Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th April 2019 16:46:25 Hours

பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழு இராணுவ தளபதியை சந்திப்பு

பாக்கிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 17 மாணவர்கள் உள்ளடங்களான பிரதிநிதிக் குழுவினர் கடந்த 16 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்திதனர்.

ஏயா கொமாண்டோ முஸ்தபா அன்வர் அவர்களின் தலைமையிலான இக்குழுவில் பங்களதேஷ், ஈரான், நேபால், மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 இராணுவ அதிகாரிகள் 4 விமானப் படை அதிகாரிகள் 2 கடற் படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிவிலியன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஏயா கொமாண்டோ முஸ்தபா அன்வர், பணிப்பக அதிகாரி, மற்றும் லெப்டினன் கேணல் முகமட் பைசல் ஆகியோர் இராணுவ தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தளபதியின் அலுவலகத்தில் சந்தித்து தொழில் கற்கை பாடநெறி சம்பந்தமாக தங்களது கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இராணுவ தளபதியுடனான இச்சந்திப்பின்போது ஞாபகச் சிண்ணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் குறித்த பிரதிநிதிக் குழுவுக்கு இராணுவத்தின் வகிபாகம் மற்றும் பணி பற்றிய விளக்கமானது, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண வன்னிஆராச்சி அவர்களினால் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இக்குறித்த நிகழ்வில் கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிக பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் சஜாட் அலி மற்றும் இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண வன்னிஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இப்பிரதிநிதிக் குழு பாதுகாப்பு செயலாளர், கடற் படை மற்றும் விமானப்படை தளபதிகள், ஏனைய இராணுவ படைத் தளபதிகள் ஆகியோருடனான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதோடு, இலங்கையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனம், லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம், கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய இடங்களையும் பார்வையிடவுள்ளன. Nike shoes | Men's Footwear