Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2019 12:55:18 Hours

புது வருட தின டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 581 ஆவது படையணியின் பங்களிப்பு

அன்மையில் இரண்டு குழந்தைகள் டெங்கினால் பாதிக்கப்ட்டு மரணமடைந்த இடமான காலி கராப்பிட்டிய கலகெடிய சந்தியில் புது வருட தினத்தன்று (13) ஆம் திகதி 25 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊளியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் சேர்ந்து டெங்கு பரவக்கூடிய இடங்களில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர்.

இராணுவத் தளபதியவர்களின் விஷேட வழிகாட்டலுக்கு அமைவாக இரண்டு மாதங்களாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 500 இற்கும் அதிகமான இராணுவ படையினர் இக் கொடிய நோயினை அழிக்க முன்னோடியாக திகழ்கின்றமையால்,பூசாவில் உள்ள 58 ஆவது படைப்பிரிவினரை இப்பிரதேசத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கவனத்திற்கொண்டு, பொலிஸார் உதவிக்காக அழைப்பு விடுத்தனர்.

அதன் பிரகாரம், 581 ஆவது படையின் படைத் தளபதி பிரிகேடியர் சந்தண ரணவீர அவர்கள் 14 ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் பங்குபற்றுதலுடன் 2 ஆவது கட்டளை அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் 14 ஹேவா படையணியியைச் சேர்ந்த 25 படை வீரர்கள் அவசரமாக குறித்த இப்பிரதேசத்திற்கு இன்று காலை (13) ஆம் திகதி அனுப்பப்பட்டனர்.

மேலும், இராணுவ டிரக் வண்டிகளின் உதவியுடன் டெங்கு பரவக்கூடிய இடங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து அதனை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் ஏனையோர்கள் ஈடுபட்டனர்.spy offers | New Releases Nike