Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2019 08:42:22 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

சிவில் சமூக மற்றும் இராணுவத்தினருக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடனான சந்திப்பு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் முஸ்லிம் சமய தலைவர்களுக்கிடையில் கடந்த செவ்வாய் கிழமை (9) ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்திலுள்ள காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாணத்தில் பொதுவாக எதிர்நோக்கக் கூடிய சட்டபூர்வமற்ற செயற்பாடுகள், காணிப்பிரச்சினை மற்றும் இளைஞர்களை கடுமையாக பாதிப்புகுள்ளாக்கிய போதைப் பொருள் பாவனையின் அதிகரிப்பு போன்றவைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டன. இங்கு சமூகமளித்த அனைவரும் எதிர்கால இளைய சமுதாயத்தை போதைப் பொருள் பாவனையிருந்து பாதுகாப்பதன் அவசியத்தைப்பற்றி குறிப்பிட்டனர்.

அதனைத் தொடந்து, மேற்குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கான சிவில்சமூக மற்றும் இராணுவத்தினருக்கிடையிலான சிறந்த தொடர்பாடலின் அவசியத்தை பற்றியும் தளபதியவர்கள் குறிப்பிட்டார்.தளபதியின் இக்கருத்திற்கு முஸ்லிம் சமய தலைவர்கள் முழுமையான தங்களது ஒத்துழைப்பை வழங்க உடன்பட்டதுடன், கிழக்கு கட்டளைத் தளபதியின் இவ் ஏற்பாட்டிற்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஜெம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.ஐ. ஆதம் லெப்பை, பள்ளிவாயல் உறுப்பினர்கள், மேஜர் ஜெனரல் டப்ல்யூ.ஏ.கே.பீ.உடலுபொல, 23 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.affiliate tracking url | Air Jordan