Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

13th April 2019 10:41:59 Hours

புதிய மத்திய பாதுகாப்பு தளபதியின் பதவியேற்பு

மத்திய பாதுகாப்பு படையின் புதிய தளபதியாக இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (12) ஆம் திகதி டியத்தலாவ இராணுவ பாசறையில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். விரைவில் அடுத்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ள மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்;புடன் இடம்பெற்ற புத்த சமய நிகழ்வுகளுக்கு முன்னர் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் சம்பிரதாயங்களினடிப்படையில் வரவேற்கப்பட்டார்.

மேலும் மேஜர் ஜெனரல் வடுகே அவர்கள் அனைத்து படை அதிகாரிகளின் மத்தியில் குழுவாக செயற்படுவதன் முக்கியத்துவத்தைப்பற்றி எடுத்துரைத்ததோடு தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். குறித்த இந்த புதிய பதவிக்கு முன்பாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் படைத் தகபதியாக கடமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்வில் 11 மற்றும் 12 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதிகள், 111 112, 121, 122 ஆவது படையின் படைத்தளபதிகள், மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.