Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2019 08:46:04 Hours

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள்

இலங்கை இராணுவ தலைமையகத்தில் வருடாந்தம் இடம்பெறும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் இம்முறை பனாகொடை இராணுவ முகாமில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் படையணி தலைமையக விளையாட்டுமைதானத்தில் (10) ஆம் திகதி புதன்கிழமை கோலாகாலமாக இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டிற்கான ‘பக்மாஉலெல்ல’ சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியாரான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்கள் வருகை தந்தனர்.

பின்னர் இராணுவ தளபதி அவர்களினால் தேசிய கொடியும், பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவ கொடிகளும் ஏற்றி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இந்த நிகழ்வில் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த நிகழ்வின் ஆரம்பமாக இராணுவ தளபதி, பதவிநிலை பிரதானி, இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் புறாக்கள் பறக்கவிட்டும், பச்சை வர்ண பலூன்கள் ஆகாயத்தை நோக்கி பறக்கவிடும் நிகழ்வுகள் மைதானத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தலைமையகத்தில்உள்ளசிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவா வனிதா பிரிவின் மூத்த அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த புத்தாண்டு நிகழ்வில் கேலிக்கை விளையாட்டுக்களான ரபன் அடித்தல், தலையனிஉறை அடித்தல், அழகு ராணிகள் தேர்ந்தெடுத்தல், யானைக்கு கண் வைத்தல், பனிஸ் உண்ணுதல், மெதுவான் சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டங்கள், வினோத உடை, தடை தாண்டும் போட்டிகள் இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்ட நபர்களுக்கு இராணுவ தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகளினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் அனைவருக்கும் புத்தாண்டு பகல் விருந்தோம்பலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த புத்தாண்டு நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களது பாரியார்களும் இணைந்திருந்தனர். Running sports | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!