Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2019 22:50:02 Hours

யாழ் படையினர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொடர்பான செயலமர்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வுகள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மொரடுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான பேராசிரியர் திலினி குணசேகர அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வேண்டுகோளுக்கமைய இந்த செயலமர்வில் விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் உட்பட 350 படை வீர ர்கள் இணைந்திருந்தனர்.

பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை மறுசுழற்சி செய்வதன் நன்மைகள் மற்றும் மாற்று இயற்கைப் பொருட்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், அனைத்து மாசுபடுதல்களிலிருந்து அனைத்து இராணுவ முகாம்களையும் விடுவிக்கும் கருத்துக்களை உள்ளடக்கி இந்த செயலமர்வுகள் இடம்பெற்றது. jordan release date | Nike Running