25th March 2019 11:00:32 Hours
போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் விஜயபாகு காலாட் படையணியின் 29 ஆவது ஆண்டு நிறைவு விழா இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்தார்.
இவரிற்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு சென்று உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவித்து அஞ்சலியை செலுத்தினார்.
படைத் தளபதியினால் படையினர்களுக்கு மத்தியில் உரை ஆற்றப்பட்டு பின்னர் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் இம் மாதம் (20) ஆம் திகதி 29 தேரர்களின் பங்களிப்புடன் தலைமையகத்தில் பிரித் தான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்து கொண்டனர். Running Sneakers Store | Women's Sneakers